'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் வெளியானது! | 'டிஜே டில்லு 2' படத்தின் ரிலீஸ் தேதி இதோ! | திமுக ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கும் உதயநிதி: நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம் | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்! | குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்! | இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை! | சுனைனாவின் ரெஜினா டிரைலர் வெளியானது! | தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு 'சீட்' ஒதுக்கீடு: ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு | இந்தியன்-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?: ரகசியம் காக்கும் படக்குழு | அஜித்துக்கு வில்லனாகும் அர்ஜூன் தாஸ்? |
தமிழ் சினிமாவில் வேறு மொழிகளில் வெற்றி பெற்ற, நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களை ரீமேக் செய்வது வழக்கமான ஒன்று தான். பல இயக்குனர்கள் அந்த ஒரிஜனல் படங்களின் டிவிடியை வாங்கி வைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடக்கும் போது, டிவிடியைப் பார்த்துப் பார்த்து அப்படியே வருமாறு படம் பிடிப்பார்கள்.
சிலர், திரைக்கதையை தமிழுக்கு ஏற்றபடி மாற்றி எடுப்பார்கள். சிலர் கதையைக் கொஞ்சம் மாற்றி எடுப்பார்கள். இப்படி ஒரிஜனல் படமான 'அர்ஜுன் ரெட்டி' படம் போல இல்லாமல் போனதால்தான் 'வர்மா' படத்தை எடுத்து முடித்தும் வெளியிடாமல் விட்டுவிட்டார்கள்.
ரீமேக் படங்களை அப்படியே காப்பி அடித்து எடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அந்தப் படங்களின் போஸ்டரைக் கூட அப்படியேவா காப்பியடிப்பது என்று 'பின்க்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'நேர் கொண்ட பார்வை' முதல் பார்வை பற்றி விமர்சனம் எழுந்துள்ளது.
முன்னணி நடிகர் அஜித் நடிக்கும் ஒரு படத்திற்கு இப்படிச் செய்யலாமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. போஸ்டரே இப்படி காப்பியடிக்கப்பட்டுள்ளதால், படம் முழுவதும் அச்சு அசலாக 'பின்க்' படம் போல இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.