ஆகஸ்ட் மாதமே திரைக்கு வரும் ரஜினியின் ஜெயிலர் | கண்ணீர் அஞ்சலி பேனர் உடன் நடிகர் ஜி.எம்.குமார் | காஷ்மீரில் நில அதிர்வு : சென்னை திரும்பிய விஜய் | மகனை தொடர்ந்து அப்பாவை இயக்கும் மாரி செல்வராஜ் | கிரிக்கெட் பயிற்சியில் ‛அட்டகத்தி' தினேஷ் | ஜீவா - அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் | லியோ படத்தில் நடிக்கிறாரா யு-டியூப்பர் இர்பான்? | ஜெயம் ரவி - ஏஆர் ரஹ்மான் இணையும் பான் இந்திய படம் | மீண்டும் கதை நாயகியான அபிராமி | டி.வி.யில் நேரடியாக வெளியாகும் ஆரி படம் |
'காதல்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜோஷ்வா ஸ்ரீதர். அதன்பின் 'உயிர், சென்னை காதல், அரண், கல்லூரி, வெப்பம், ஒரு குப்பைக் கதை' என சில படங்களுக்கு இசையமைத்தார். தற்போது 'ஜுலை காற்றில்' படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
2004ல் 'காதல்' படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி யார் இந்த ஜோஷ்வா ஸ்ரீதர் என்று கேட்க வைத்தது. அதன் பின்னர் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் வந்த சில பிரச்சினைகளின் காரணமாக அவர் அதிகப் படங்களுக்கு இசையமைக்கவில்லை. அடிக்கடி இடைவெளி விட்டுவிடுவார்.
இந்த 15 வருடங்களில் 16 தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்கிறார். நேற்று நடந்த 'ஜுலை காற்றில்' இசை வெளியீட்டு விழாவில் முதல் முறையாக நீண்ட நேரம் உரையாற்றினார். அதிலும் இதுவரை அவரைப் பற்றி சொல்லாத ரகசியமாக தான் யார் என்பதையும் தெரிவித்தார்.
'ரத்தக் கண்ணீர், ஹரிச்சந்திரா, தாயின் மடியில், குபேரத் தீவு, தாய்க்கு பின் தாரம், கண்கள், இதயகீதம், நானே ராஜா' படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவரும், எம்ஜிஆர் நடித்த 'தாய் மகளுக்குக் கட்டிய தாலி', சிவாஜிகணேசன் நடித்த 'மகாகவி காளிதாஸ், நானே ராஜா' படங்களை இயக்கிய ஆர்.ஆர். சந்திரன் தான் ஜோஷ்வா ஸ்ரீதரின் தாத்தா. சந்திரனின் மகள் வயிற்றுப் பேரன் ஜோஷ்வா ஸ்ரீதர்.
“எனக்கு சிறு வயதிலேயே இசையமைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எனக்கு இரண்டு குருக்கள் ஒருவர் இளையராஜா, மற்றொருவர் ரகுமான். இளையராஜா அவர்களின் இசையைக் கேட்டு வளர்ந்தவன். அவரைப் பார்த்துதான் இசையமைப்பாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் எவ்வளவு ஹிட் கொடுத்தாலும், அது அவரது பாடல்களைப் போல இல்லை என்ற எண்ணம் எனக்கு இருக்கும். என் இசை இயக்குனர்களுக்குப் பிடித்துப் போவதால் என் பயணம் தொடர்கிறது,” என்றார்.