'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் வெளியானது! | 'டிஜே டில்லு 2' படத்தின் ரிலீஸ் தேதி இதோ! | திமுக ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கும் உதயநிதி: நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம் | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்! | குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்! | இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை! | சுனைனாவின் ரெஜினா டிரைலர் வெளியானது! | தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு 'சீட்' ஒதுக்கீடு: ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு | இந்தியன்-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?: ரகசியம் காக்கும் படக்குழு | அஜித்துக்கு வில்லனாகும் அர்ஜூன் தாஸ்? |
விஜய் ஆண்டனி நடித்து வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி வருகின்றன. கடைசியாக அவர் நடித்த திமிரு புடிச்சவன் படமும் கைகொடுக்கவில்லை. இதனால் தயாரிப்பை நிறுத்திவிட்டு பிற தயாரிப்பாளர்களின் படத்தில் நடித்து வருகிறார்.
அதேநேரம் தன்னுடைய படங்கள் தோல்வியடையாமல் வெற்றியைப் பெற வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார். அதற்காக இன்னொரு பிரபல ஹீரோவை தன்னுடைய படத்தில் இழுத்துப்போட்டுக் கொள்கிறார்.
விஜய் ஆண்டனி தற்போது கதாநாயகனாக நடித்துவரும் 'அக்னி சிறகுகள்' படத்தில் அருண் விஜய் இன்னொரு ஹீரோக நடித்து வருகிறார். விஜய் ஆண்டனியின் மற்றொரு படமான கொலைகாரன் படத்தில் முக்கிய வேடத்தில் அதாவது போலீஸ் அதிகாரி வேடத்தில் அர்ஜுன் நடித்துள்ளார்.
தற்போது தொடங்கப்பட்டுள்ள காக்கி படத்தில் ஜெய் இன்னொரு ஹீரோக ஒப்பந்தம் செய்துள்ளார். தனக்காக ரசிகர்கள் படம் பார்க்க வரவில்லை என்றாலும், உடன் நடிக்கும் மற்ற ஹீரோக்களுக்காக தியேட்டர்களுக்கு வருவார்கள் என்பது விஜய் ஆண்டனியின் கணக்கு.
பலே விஜய் ஆண்டனி.