இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி | ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல் | டெவில் படம் மூலம் இசையமைப்பாளரான மிஷ்கின் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான முனி, முனி-2, முனி-3 ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. காஞ்சனா-2 படத்தை அடுத்து முனி-4 அதாவது காஞ்சனா-3 படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி, நடிக்கிறார். ஒரு பாடல்காட்சியை தவிர மற்ற காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ஓவியாவும், வேதிகாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமன், தேவதர்ஷிணி என இதற்கு முந்தைய பாகங்களில் நடித்த பெரும்பாலனோரும் இந்த பாகத்திலும் நடிக்கிறார்கள். எஸ்.எஸ்.தமன் இசை, வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.
காஞ்சனா-3 விரைவில் திரைக்குவரவிருக்கும் நிலையில் 90 எம்.எல். என்ற ஆபாசப்படத்தில் ஓவியா நடித்துள்ளார். அந்தப்படத்தில் அவர் பேசிய ஆபாச வசனத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெண்கள் அமைப்பு ஒன்று ஓவியா மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளது.
இப்படியொரு படத்தில் நடித்து பெயரைக்கெடுத்துக் கொண்டுவிட்ட ஓவியாவினால் தன்னுடைய படத்தின் வெற்றி பாதிக்குமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார் ராகவா லாரன்ஸ். எனவே ஓவியாவின் காட்சிகளை குறைத்துவிட்டு மற்றொரு கதாநாயகியான வேதிகாவின் காட்சிகளை அதிகமாக்கலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம்.