நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
2016ல் 'உறியடி' என்ற படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமானவர் விஜய்குமார். 'உறியடி' சுமாரான வெற்றியைப் பெற்றாலும் பல தரப்பினருடைய பாராட்டைப்பெற்ற படமாக அமைந்தது.
இதன் மூலம் அப்போது கவனிக்கப்பட்ட விஜய்குமார் இப்போது 'உறியடி' படத்தின் இரண்டம் பாகத்தை இயக்கி வருகிறார். 'உறியடி' படத்தின் இரண்டாம் பாகத்தை சூர்யாவின் '2D எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்குமார் இணை தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்குமார் ஹீரோவாகவும், கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சுதாகர், ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பை 36 நாட்கள் ஒரே கட்டமாக நடத்தி முழு படத்தையும் முடித்தனர்.