தமிழில் வெளியாகும் ஹாலிவுட் பேய் படம் | மைதான் : அறியப்படாத இந்திய கால்பந்து அணியின் கதை | ஆன்மிக அழைப்பில் சுபிக்ஷா | பிரியங்கா சோப்ராவை துரத்தியது கரண் ஜோஹர்தான்: கங்கனா குற்றச்சாட்டு | வெப் தொடரில் நடிக்கும் பிக்பாஸ் மணிகண்ட ராஜேஷ் | அரசியலுக்கு வரமாட்டேன் : விஜய் சேதுபதி பேட்டி | தியேட்டரில் நரிக்குறவர் இன மக்களை அனுமதிக்காத செயல் : கமல், வெற்றிமாறன் கண்டனம் | 5 மொழிகளில் மாஸ்டர் மகேந்திரனின் புதிய படம் | விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் மாயம் : மனைவி போலீஸில் புகார் | 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் 'நந்தினி' நித்யா ராம் |
இயற்கையிலேயே குத்துச் சண்டை பயிற்சி எடுத்த குத்துச் சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், 'இறுதிச் சுற்று' என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானார். சுதா இயக்கிய இந்தப் படத்தில், நடிகர் மாதவனுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்தப் படத்திலும் குத்துச் சண்டை வீராங்கனையாகவே அவர் நடித்திருந்தார். தனக்கு விருப்பமான குத்துச் சண்டை விளையாட்டை அந்தப்படம் பிரதிபலித்ததால், அந்தப்படத்தில் தன்னால் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்ததாக கூறியிருந்தார்.
இந்த படத்தைத் தொடர்ந்து, அவர் 'சிவலிங்கா' உள்ளிட்ட பல படங்களில் நடித்ததோடு, பிலிம்பேர் விருதையும் பெற்றார். இந்தப் படங்களின் தொடர்ச்சியாக, அவர் 'மீ டூ' என்ற புதிய படத்தில் நடித்திருக்கிறார். பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, மன நோய்க்கு ஆளாகும் கல்லூரி மாணவியின் கேரக்டரில் 'மீ டூ' வில், ரித்திகா சிங் நடித்திருந்தார்.
'மீ டூ' படத்தை, அமெரிக்காவைச் சேர்ந்த ஹர்ஷ் வர்தன் என்பவர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பாகவே இயக்கி முடித்து, அதை மத்திய படத் தணிக்கை வாரியத்துக்கும், தணிக்கை சான்றுக்காக அனுப்பி இருந்தார். அந்தப் படத்தில் இருக்கும் நிறைய வசனங்கள் ஆட்சேபனைக்குரியதாக இருப்பதால், படத்துக்கு தணிக்கை சான்று தராமல் மறுத்து விட்டது. இதைத் தொடர்ந்து, தணிக்கை மறு சீராய்வு குழுவிடம் அனுமதிக்காக அணுகினர். அவர்களோ, படத்தின் தலைப்பான 'மீ டூ' வையே அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளர் சாஜித் குரேஷி என்பவர், தணிக்கைக் குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகி முறையிட்டு, அதன் மூலம் அனுமதி பெற்று படத்தை வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளதாக, படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.