வந்தது 15, வசூலானது 1 : நவம்பர் மாத படங்கள் ஓர் பார்வை | மற்றுமொரு விவசாய படம் | நண்பர்கள் முத்தம் கொடுப்பார்களா?: ஜெயஸ்ரீ பேட்டி | ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! |
அறிமுக இயக்குனர் கேஆர் பிரபு இயக்கத்தில், ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், ஜேகே ரித்தீஷ் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் எல்கேஜி. இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று லாபகரமான வெற்றியைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து உடனே சக்சஸ் மீட்டும் நடத்தினார்கள்.
ஆனால், அந்த விழாவுக்கு படத்தின் இயக்குனர் கேஆர் பிரபு, பைக்கில்தான் வந்து சென்றார். ஒரு பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனருக்கு படத்தின் தயாரிப்பாளரோ, நாயகனோ ஒரு காரை பரிசாக அளித்திருக்கலாமே என நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதைத் தொடர்ந்து இப்போது இயக்குனர் கேஆர் பிரபுக்கு கார் ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் பரிசளித்திருக்கிறார். மேலும், படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கும் சிறப்பு பரிசுகளைக் கொடுத்திருக்கிறார்.
இது பற்றி படத்தின் இயக்குனர் கேஆர். பிரபு கூறுகையில், “எனக்கு எளிமைதான் பிடிக்கும். அதனால்தான் பைக்கில் பல இடங்களுக்கும் செல்வேன். நான் பைக்கில் சென்ற செய்தியைப் படித்துவிட்டுத்தான் தயாரிப்பாளர் கார் வாங்கிக் கொடுத்தாரா என்பது தெரியாது. எல்கேஜி படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கொடுத்த மக்கள், பாராட்டி எழுதிய பத்திரிகையாளர்கள், படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சார், ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், மற்றும் அனைத்து படக்குழுவினருக்கும் எனது நன்றி,” எனத் தெரிவித்தார்.