டி.ராஜேந்தரின் உடல்நலனை விசாரித்த முதல்வர் ஸ்டாலின் | ரஜினியை சந்தித்த கமல், லோகேஷ் | பிபியை எகிறச் செய்யும் சிவானியின் பேரழகு | குமரிப்பெண், முதல் நீ முடிவும் நீ, காஞ்சனா 2 - ஞாயிறு திரைப்படங்கள் | சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சாக்ஷி அகர்வால் | ஸ்ருதி சண்முகப்ரியாவின் பேச்சுலர் பார்ட்டி புகைப்படங்கள் வைரல் | சித்ரா மாதிரி ஆகிடுமோனு பயமா இருக்கு : நக்ஷத்திரா பற்றி பகீர் கிளப்பும் ஸ்ரீநிதி விஜய் | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஷங்கர் பட நாயகி | மன்சூரலிகானிடம் ரூ. 50 லட்சம் மோசடி | சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் - அக்சய்குமார் லுக் வெளியானது |
1990ல் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானவர் நக்மா. அதன்பிறகு 3 வருடங்களில் ஹிந்தி, தெலுங்கில் 20 படங்கள் வரை நடித்து விட்டு, 1993ல் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்த காதலன் படத்தில் தமிழுக்கு வந்தவர் நக்மா. அதையடுத்து பாட்ஷா, ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன் என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
2007க்குப்பிறகு சினிமாவில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல்வாதியாக வலம் வந்தார். மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது 44 வயதாகும் நக்மா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது : "திருமணம் என் கையில் இல்லை, கடவுள் தான் தீர்மானிக்க வேண்டும். எனக்கான நேரம் வரும்போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். நான் திருமணத்திற்கு எதிரான நபர் கிடையாது" என தெரிவித்துள்ளார்.