Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் : ஹீரோயின்கள் வேண்டுகோள்

02 மார், 2019 - 13:48 IST
எழுத்தின் அளவு:
Terrorism-should-abolish-says-four-heroines

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் நிறுவனத்தின் முதல் சோலோ பெண் சூப்பர் ஹீரோ படம் கேப்டன் மார்வெல். ப்ரீ லார்சன், சாமுவேல் எல் ஜாக்சன் ஆகியோர் நடிக்க, அன்னா போடென், ரையான் இயக்கி இருக்கிறார்கள். மார்வெல் ஸ்டுடியோஸ் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இத்திரைப்படம் மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்தியாவிலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகைகள் தமன்னா, சமந்தா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் டிஸ்னி இந்தியா தலைமை அதிகாரி பிக்ரம் துக்கல் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் தமன்னா பேசியதாவது:

ஒரு சக்தி வாய்ந்த பெண்ணை திரையில் பார்க்கும் போது நம்மாலும் எல்லாம் முடியும் என்ற நம்பிக்கையை நமக்கு தருகிறது இந்த கேப்டன். ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்வில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அதை தாண்டி அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள்.

தற்போது பெண்களை வைத்தும் பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்கப்படுகின்றன. நிறைய பெண்களை மையப்படுத்திய படங்கள் இந்தியாவிலும் வந்து கொண்டிருக்கின்றன. கேப்டன் மார்வெல் சூப்பர் ஹீரோ படம், உலக அளவில் மிகப்பெரிய கதவுகளை திறந்து விட்டிருக்கிறது. நம் இந்திய சினிமாவில் கூட அருந்ததி போன்ற படங்களும் வந்திருக்கின்றன.

கேப்டன் மார்வெல் மாதிரி எனக்கு சக்தி கிடைத்தால், தூய்மையை மேம்படுத்துவேன், பெண் சிசுக் கொலை, ஊழல் ஆகியவற்றை ஒழிப்பேன். உலக அமைதிக்காக தீவிரவாத நடவடிக்கைகளை ஒழிப்பேன். மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க, அதை நல்ல வழியில் உபயோகப்படுத்துவேன். என்றார்.

பின்னர் பேசிய காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங், சமந்தாவும் உலக அமைதிக்காக தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி பேசினர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் நடிக்கிறார் திண்டுக்கல் லியோனிமீண்டும் நடிக்கிறார் திண்டுக்கல் ... ஆசியாவின் சிறந்த படமாக சிவரஞ்சனி தேர்வு ஆசியாவின் சிறந்த படமாக சிவரஞ்சனி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in