சில்க் ஸ்மிதாவுக்கு சமர்ப்பணம் செய்த காஜல் பசுபதி | உன் குறிக்கோள் சரியாக இருந்தால் ஒவ்வொரு அடியும் உனக்கானது : கேப்ரில்லா செல்லஸ் | விதவிதமான புடவைகளில் அழகாக போஸ் கொடுத்த கண்மணி மனோகரன்! | ஆல்யாவை போல போஸ் கொடுத்த அய்லா | உங்களில் யார் அடுத்த ஸ்டார் : ஜீ தமிழ் நடத்தும் மெகா ஆடிசன் | நவாசுதீன் சித்திக்கிற்கு பிரென்சு ரிவேரியா விருது | கங்குலி வாழ்க்கையை இயக்குவது ஐஸ்வர்யா ரஜினிகாந்தா? | பிக்பாஸ் 6ல் இமானின் மாஜி மனைவி பங்கேற்கிறாரா? | கமல் பேசிய ஆபாச வசனத்தை போஸ்டராக ஒட்டிய ரசிகர்கள் மீது வழக்கு பதிவு | பாலியல் தொழிலாளியாக நடித்த அனுபவம் : வினித்ரா மேனன் |
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி. அடிப்படையில் பள்ளி ஆசிரியரான இவர், பட்டிமன்ற நடுவராக புகழ்பெற்றார். அதிலும், குறிப்பாக சினிமா பாடல்கள் குறித்து பட்டிமன்றங்கள் மூலம் பிரபலம் ஆனார். அதன் பிறகு திமுவில் சேர்ந்து அந்த கட்சியின் நட்சத்திர பேச்சாளர் ஆனார்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கங்கா கவுரி என்ற படத்தில் காமெடி நடிகராக அறிமுகம் ஆனார். ஆனால் அந்தப் படம் பெரிய தோல்வி அடைந்ததால் அதன் பிறகு அவர் சினிமாவில் நடிக்கவில்லை. தற்போது பல வருடங்களுக்கு பிறகு, பன்னிகுட்டி என்ற படத்தில் நடிக்கிறார்.
இதில் யோகிபாபுவும், கருணாகரனும் ஹீரோவாக நடிக்கிறார்கள், லட்சுமிப்ரியா ஹீரோயின். இது முழுநீள காமெடி படம். திண்டுக்கல் லியோனியும் காமெடியனாக நடிக்கிறார். பட்டிமன்ற பேச்சாளராக இருந்து சாலமன் பாப்பையா, ராஜா, பேராசிரியர் ஞானசம்பந்தம் ஆகியோர் நடிகர்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.