இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா | 'கைதி' வரவேற்பு : ஹிந்தி ரீமேக்கான 'போலா'வுக்குக் கிடைக்குமா? | ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்த 'பிசாசினி' | மகேஷ் பாபு நடிக்கும் படம் : டைட்டிலுக்கு முன்பே ரிலீஸ் தேதி அறிவிப்பு | 2 நாயகிகள் அறிமுகமாகும் அங்காரகன் |
திரையுலக நட்சத்திரங்கள் இப்போது எங்கு போனாலும், அவர்கள் போனைத் தட்டிவிட்டால் கூட எப்படியாவது ஒரு செல்பி அல்லது ஒரு போட்டோ எடுத்துவிட வேண்டும் பல ரசிகர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஒரு நடிகையோ, ஒரு ஹீரோவிடம் போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்டு எடுத்துக் கொண்ட நிகழ்வு பாலிவுட்டில் நடந்திருக்கிறது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, சில ஹிந்திப் படங்களில் நடித்தாலும் அவரால் அங்கு முன்னணிக்குப் போக முடியவில்லை. ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தீவிர ரசிகை தமன்னா. ஒரு விருது வழங்கும் விழாவில் ஹிருத்திக்கைச் சந்தித்திருக்கிறார். அவரைச் சந்தித்து விட்டுச் செல்லும் போது, ஹிருத்திக்கே தமன்னாவிடம் போட்டோ எடுக்க வேண்டுமா எனக் கேட்டு அழைக்க, தமன்னா உடனடியாக ஆமாம் எனச் சொல்லி அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டாராம்.
இந்தத் தகவலைப் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் பகிர்ந்த தமன்னா, தான் சினிமாவில் முத்தக் காட்சியில் நடிக்க எப்போதும் சம்மதம் தெரிவித்ததில்லை. ஆனால், ஹிருத்திக் ரோஷன் என்றால் முத்தக் காட்சிக்கு ஓகே என்று சொல்லி தமிழ், தெலுங்கு நடிகர்களிடம் பொறாமையை ஏற்படுத்தியிருக்கிறார்.