Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'அன்பே சிவம்' தோல்வியை மறக்காத சுந்தர் .சி

02 மார், 2019 - 13:18 IST
எழுத்தின் அளவு:
Sundar-C-still-feel-about-Anbe-sivam-failure

ஒரு படத்தின் வரவேற்பு அதன் வெற்றி, தோல்வியை வைத்து மதிப்பிடப்படுவதில்லை என்பது இயக்குனர்கள் பலருக்கும் தெரியும். ஆனால், பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் சுந்தர் .சிக்கு அது இன்னும் புரியாமல் இருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.

அவரது இயக்கத்தில் கமல்ஹாசன், மாதவன், கிரண் நடித்து 2003ல் வெளிவந்த படம் 'அன்பே சிவம்'. அந்தப் படம் கமர்ஷியல் ரீதியாக தோல்விப் படமாக அமைந்தாலும், ஒரு சிறந்த படமாக வரவேற்பு பெற்ற படம். இப்போதும் அந்தப் படத்தின் காட்சிகளை வைத்து மீம்ஸ் போடும் அளவிற்கு மக்கள் மனதில் பதிந்துள்ளது.

இருந்தாலும், அந்தப் படத்தின் தோல்வியை இரு தினங்களுக்கு முன்பு நடந்த 'நட்பே துணை' டிரைலர் வெளியீட்டு விழாவிலும் இயக்குனர் சுந்தர் .சி குறிப்பிட்டுப் பேசியது ஆச்சரியம்தான். “நான் இயக்கும் படங்களில் அட்வைஸ் சொல்ல முடியவில்லை. என் படங்களில் ஆடியன்ஸ் எதிர்பார்த்து வருவது என்டர்டெயின்மென்ட். அங்க நான் கருத்து சொன்னால் 'அன்பே சிவம்' மாதிரி ரிசல்ட் கொடுத்து விடுகிறார்கள். அதனால், என்டர்டெயின்மென்ட்டா போய்விட்டேன்,” என்றார்.

சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளிவந்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் என்ன மாதிரியான படம், அது ஏன் தோல்வி அடைந்தது என சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. நான்கு வாரங்களுக்கு முன்பு வந்த படத் தோல்வியைப் பற்றி கூறாமல் 16 வருடங்களுக்கு முன்பு வந்த தோல்வியை சுந்தர் .சி குறிப்பிடுவது நியாயமா ?.

Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
நாளை நடப்பதாக இருந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு ஒத்திவைப்புநாளை நடப்பதாக இருந்த தயாரிப்பாளர் ... ஹிருத்திக் என்றால் முத்தக் காட்சிக்கு ஓகே : தமன்னா ஹிருத்திக் என்றால் முத்தக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

Muga Kannadi - chennai,இந்தியா
04 மார், 2019 - 11:50 Report Abuse
Muga Kannadi முதலில் அன்பே சிவம் எதிலிருந்து காபி? "Planes, Trains, Automobiles"... கரெக்ட் தானே...
Rate this:
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
04 மார், 2019 - 10:30 Report Abuse
Thalaivar Rasigan கமல் ரசிகர்கள் ரொம்ப துள்ள வேண்டாம் - ஒரு படம் தோல்வி அடைந்தால் நஷ்டம் நடிகருக்கு இல்லை. சொந்த பணத்தை போட்டு விஷ பரீட்ஷை செய்யலாம். ஆனால் ஒரு தயாரிப்பாளரின் வாழ்க்கையை நாசம் செய்து விட்டு, சாதனை என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்.
Rate this:
S.v. Ramaswamy - Coimbatore,இந்தியா
03 மார், 2019 - 13:43 Report Abuse
S.v. Ramaswamy அட்வைஸ் தந்தது கமல்தான். சுந்தர்.சி. இல்லை. அந்த உயரத்தை எல்லாம் சுந்தர்.சி இன்னமும் எட்டவில்லை. எட்டவும் முடியாது. அன்பே சிவம் அவர் இயக்கியது என்பதை அவர் அவ்வப்பாேது இப்படி ஞாபக படித்தினால்தான் உண்டு. மற்றபடி அது முழுக்க முழுக்க கமலின் அற்புத படங்களில் ஒன்று.
Rate this:
thiru - Chennai,இந்தியா
03 மார், 2019 - 10:35 Report Abuse
thiru இன்னும் என்னால நம்ப முடியாத விஷயம் என்னவென்றால் இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அன்பே சிவம்... மிக சிறந்த தமிழ் படங்களில் இதுவும் ஒன்று..
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
03 மார், 2019 - 03:37 Report Abuse
meenakshisundaram அன்பே சிவம் மிக சிறநத தொரு படம். இட் ஐஸ் EDUCATIVE .மக்கள் குதியாட்டம்.கேளிக்கை எதிர்பார்ப்பது அவர்களின் ரசனைக்குறைவே.அதில் அப்போதே :சுனாமி'சொல்லப்பட்டு விட்டது.ஆனால் நம் தமிழ் மக்களுக்கு அது அடித்தவுடன் தான் தெரிந்தது.அதில் ஓரிரு பிஸ்ட்டுக்கலும்மிக சிறப்பே.வித்யா சாகர் நல்ல Isai கொடுத்துருந்தார்.நாசரின் கேரக்டர் சில இடங்களில் சிவனை நக்கல் செய்வதேபோல தோன்றினாலும் வாரில்லை.கிளைமாக்ஸ் .மூன்றாம் பிறையை மிஞ்சாது,ஆனால் மக்கள் அதை உணரவே இல்லை.அதில் இருந்த சஸ்பென்ஸ் 'அந்த நாள்'படத்திற்கு பின்னர் வந்த ஒரே படம்.ஆனால் இதை சுந்தர் சி தான் இயக்கினாரா?கமல் .மாதவனின் நடிப்பு அருமை.வேறு எந்த ஜோடியாலும் செய்ய முடியாதது.
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in