Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சோகத்தில் கமல் ரசிகர்கள்!

28 பிப், 2019 - 23:31 IST
எழுத்தின் அளவு:
சோகத்தில்-கமல்-ரசிகர்கள்!

விஸ்வரூபம் படத்துக்கு பின், கமல் நடித்த படங்கள் எதுவும் பெரிய வெற்றி பெறவில்லை. மெகா ஹிட் படத்தை, அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்குள் அவர் அரசியலில், 'பிசி'யாகி விட்டதால், இனி படங்களில் நடிக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு, அவரது ரசிகர்கள் வந்தனர்.

அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்தியன் - 2 பட அறிவிப்பு வெளியாகி, கடந்த மாதம், சென்னையில் சில இடங்களில் படப்பிடிப்பும் நடந்தது. திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால், படம் கைவிடப்பட்டதாக வதந்தி பரவியது. தயாரிப்பு நிறுவனம், அதை மறுத்தது.


தற்போது லோக்சபா தேர்தல் நெருங்குவதால், கமல், அரசியல் களத்தில் மீண்டும்,'பிசி'யாகி விட்டார். இதனால், 'மீண்டும் எப்போது படப்பிடிப்பு துவங்கி, எப்போது படம் வெளியாகுமோ...' என, அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வெளுத்துக்கட்டும் கல்யாணி!வெளுத்துக்கட்டும் கல்யாணி! பழம்பெரும் நடிகை சீதா லட்சுமி காலமானார் பழம்பெரும் நடிகை சீதா லட்சுமி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05 மார், 2019 - 12:15 Report Abuse
Malick Raja முதலில் பொதுவாழ்வில் தானேயொரு உதாரணமாக இருக்கவேண்டும். கமல் அப்படியெல்லாம் உதாரணமாக இருக்கவே முடியாது . சொந்த வாழ்க்கை சூனியாமாகி பொதுவாழ்வில் ஒளியேற்றுவேன் என்பது மடைமையே தவிர வேறொன்றுமில்லை .. ஏதாவது கட்சியில் இணைந்துசெயலாற்றியாவது வந்திருக்கலாம்..எதுவுமே இல்லாமல் ..அதாவது ஆயுதமில்லாமல் யுத்தகாலத்திற்கு சென்றால் என்ன விளையுமா அதுதான் கமலின் கட்சிக்கு கிடைக்கும் .. காலம் இன்னும் இருக்கிறது யாருக்காவது ஆதவாக இருந்தால் கூட கட்சி பிரபலமாகிவிடும் . அப்புறம் சட்டசபைக்கு கச்சேரி செய்யலாம் கொஞ்சம் பலன் கிடைக்கலாம் .. ஏர்ப்போருக்கு ஏற்றம் .. மறுப்போருக்கு ஏமாற்றம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in