Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வைரமுத்து விவகாரம்; அமைச்சர் வரை சென்ற சின்மயி

28 பிப், 2019 - 17:05 IST
எழுத்தின் அளவு:
Vairamuthu-issue-:-Chinmayi-complaint-Minister

பாடகி சின்மயி, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என கவிஞர் வைரமுத்து மீது குற்றம்சாட்டினார். அதை, அவர் அவ்வளவு எளிதில் விட்டுவிடுவார் என தோன்றவில்லை. தற்போது, பிரச்னையை மத்திய அமைச்சர் மேனகா காந்தியிடம் எடுத்துச் சென்று, புகார் அளித்துள்ளார்.

'மீ டூ' விவகாரத்தில், வைரமுத்து மீது சின்மயி புகார் அளித்ததெல்லாம் பழம் கதை. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பாடகி சின்மயி, மத்திய அமைச்சர் மேனகா காந்தியிடம் புகார் அளித்துள்ளார். மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சரான மேனகா காந்தியை, டேக் செய்து, சின்மயி பதிவிட்டுள்ள டுவீட்டில், 'வைரமுத்து மீது நான் புகார் அளித்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. அதன்பின், தமிழ் சினிமா துறையிலிருந்து(டப்பிங் யூனியன்) நான் விலக்கப்பட்டுள்ளேன். வழக்கு பதிவு செய்வதற்கு இன்றைய சட்டம் எனக்கு அனுமதி அளிப்பதில்லை; ஆதரவாகவும் இல்லை. எனவே, எனக்கு ஒரு தீர்வளியுங்கள்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

சின்மயி டுவீட்டுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி அளித்த பதில் டுவீட்டில், 'உங்களது புகாரை தேசிய மகளிர் ஆணையத்திடம் எடுத்துச் சென்றுள்ளேன். உங்களது விவரங்களை செய்தி அனுப்பவும்' என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் டுவீட்டுக்குப் பதிலளித்த சின்மயி, 'என்னைப் போலவே பல பெண்கள் தங்களது பாதுகாப்புக்காகவும், தொழிலுக்காகவும் அஞ்சுகின்றனர். வைரமுத்து மட்டுமல்லாமல், சினிமா துறையில் பல ஆண்களால், பெண்கள் அஞ்சுகின்றனர். எங்கள் அனைவருக்குமே தீர்வு வேண்டும். உங்களது பதில் டுவீட்டைப் பாராட்டுகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
பிள்ளை வளர்ப்புக்கு அஜித் யோசனைபிள்ளை வளர்ப்புக்கு அஜித் யோசனை மறைந்த முதல்வரின் மனைவி கதாபாத்திரத்தில் ஸ்ரீ ரெட்டி மறைந்த முதல்வரின் மனைவி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

arabuthamilan - Manama,பஹ்ரைன்
18 மார், 2019 - 14:10 Report Abuse
arabuthamilan சின்மயி இனிமேல் மேனகா பற்றியும் மீடூவில் புகார் கொடுப்பார்.
Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
02 மார், 2019 - 18:26 Report Abuse
Vaithilingam Ahilathirunayagam பெண்களை மதிக்காத தலைவனின் சீடர்கள் தான் வைரமுத்து, திண்டுக்கல் லியோனி போன்றவர்கள். இவர்கள் ஒருபோதும் தங்கள் முகங்களைப் பெல்ஜியம் கண்ணாடியில் பார்ப்பதில்லையா?
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02 மார், 2019 - 05:16 Report Abuse
J.V. Iyer உங்கள் தைரியத்திற்கு வாழ்த்துக்கள் அம்மணி உண்மையை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்கும்வரை விடாதீர்கள்.
Rate this:
skv - Bangalore,இந்தியா
01 மார், 2019 - 09:10 Report Abuse
skv<srinivasankrishnaveni> பல பெண்கள் திறமைகள் இருந்தும் வீட்டுக்குள்ளியே இருக்காங்க என்றால் முக்கியகாரணம் 98 %சீனி பீல்டுக்குலே பிராடுகளேதான் பொம்பளை பித்துக்களேதான் போறீங்க பிரபலம் ஆறதுக்கு என்று தான் ஆனால் பலர் சகிச்சுண்டுபோறாளுக காசுக்குவேண்டி சிலர் இந்த கஸ்மாலம் வேண்டாம் என்று ஒதுங்கிபோறாளுக இதுதான் உண்மை .இந்த மாதிரி அடஜஸ்ட் மென்ட்கள் அவர்களை குடிக்கு அடிமையாக்கிடுது என்பதும் உண்மை சினி உலகிலே 95% மோசம் தான் இதுலே சந்தேகம் இல்லே மாக்ஸிமம் குடிக்கும் அடிமைகளே , நீ மந்திரின்னாது மாநிலமோன்னு பயந்துட்டேன் நல்லவேளை மேனகாவிடம் போனது நல்லது நடக்கும் , இதுபோல பொறுக்கிகளுக்கு பத்ம விருதெல்லாம் கிடைச்சால் எரிச்சல்தான் வரது கண்ராவி
Rate this:
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
01 மார், 2019 - 08:57 Report Abuse
Rangiem N Annamalai பூனைக்கு மணி கட்டி விட்டீர்கள் .பார்க்கலாம் .உங்கள் முயற்சியை விட்டு விடாதீர்கள் .
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in