Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் குடும்பத்தை பாழாக்கிய எஸ்.ஐ., - தாடி பாலாஜி கண்ணீர்

28 பிப், 2019 - 15:42 IST
எழுத்தின் அளவு:

என் குடும்பத்தை பாழாக்கி, என்னையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதோடு, என்னை மிரட்டி வரும் எஸ்.ஐ. மனோஜ் குமார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிக்கை மன்றத்தில் நடிகர் தாடி பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது...

நான் சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் கடந்த 20 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். எனக்கும் சென்னையை சேர்ந்த நித்தியா என்பவருக்கும் கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு போஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

ஆரம்ப காலத்தில் எங்கள் இல்லற வாழ்க்கை நல்ல படியாக சென்றது. பின்னர் பிப்ரவரி 2017 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் பைசல் என்பவருக்கும், எனது மனைவிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து எனக்கு தெரிய வந்ததும் என் மனைவிக்கும் எனக்கும் பிரிவு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த எனக்கு தெரிந்த காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என்பவரிடம் தெரிவித்தேன். இந்த சம்பவத்தில் அவர் தலையிட்டு எனது மனைவியின் சில ரகசியங்களை எடுத்து வைத்துக் கொண்டு எனது மனைவி விஷயத்தில் இனி தலையிடக்கூடாது என்று என்னை மிரட்டி வருகிறார். மேலும் என்னையும் என் குடும்பத்தையும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்.

கள்ளத் தொடர்பால் பல கொலைகள் நடந்து வரும் இந்த நேரத்தில் இந்த சம்பவம் எனக்கு ஐயத்தை ஏற்படுத்துகிறது. போலீசார் இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தவில்லை. என் குடும்பத்தைப் பாழாக்கிய காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் மீதும், பைசல் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நித்யா பேசியது எல்லாமே நடிப்பு தான். நிகழ்ச்சி முடிந்ததும் நான் என் அம்மா வீட்டிற்கு தான் சென்றேன். நித்யாவை பார்க்க செல்லவில்லை. பணத் தேவைக்காக மட்டுமே நித்யா என்னிடம் பேசினார். என் குழந்தையை கூட பார்க்கவிடவில்லை. ஒரு தந்தையாக என் குழந்தைக்கு என்ன தேவையோ அதை செய்ய தயாராக உள்ளேன். நித்யாவால் குழந்தையின் எதிர்காலம் பாழாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் குழந்தையின் படிப்பை கவனிக்கச் சொல்லி அறிவுரை கூறினார். போர்டிங் பள்ளியில் சேர்க்கும் பட்சத்தில் குழந்தையின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்கத் தயார். நான் பணி நிமித்தமாக இருந்ததால் நித்யாவிற்கு கொடுத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார்.

தேர்தலில் நிற்பேன் என்கிறார் நித்யா. முதலில் அவர் வீட்டில் நிற்கட்டும். குடும்பத்தை கவனித்து கொள்ள முடியாத நித்யாவுக்கு நாட்டை பற்றி என்ன தெரியும், இல்லை அரசியலை பற்றி தான் என்ன தெரியும். நித்யாவின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட அவர் என்ன முதல்வர் வேட்பாளராகவா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்மார்ட் போனை விரும்பாத ஷாலினிஸ்மார்ட் போனை விரும்பாத ஷாலினி பிள்ளை வளர்ப்புக்கு அஜித் யோசனை பிள்ளை வளர்ப்புக்கு அஜித் யோசனை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
05 மார், 2019 - 00:47 Report Abuse
ராஜேஷ் உங்களை போன்ற உண்மையாக உழைப்பவர்கள் குடும்பத்தை சிதைக்கும் , வேலையே செய்யாமல் சம்பளம் வாங்கும் இந்த இரண்டு அரசுஅதிகாரிகளும் அரசாங்கம் உடனடியாக வீட்டுக்கு அனுப்பி . உழைப்பின் அருமையை தெரியப்படுத்தனும் .
Rate this:
Nesan - JB,மலேஷியா
04 மார், 2019 - 14:55 Report Abuse
Nesan உங்களை பிக்பாஸ் நிகழ்த்தியில் இருந்து கவனித்து வருகிறேன். உங்கமேலே தவறுகள் இருக்கலாம் அதற்காக உங்கள் மனைவி நடந்து கொள்ளும் விதம் முற்றிலும் தவறே. உங்கள் மனைவியை இயக்குவது அந்த எஸ்.ஐ. மட்டும் இல்லே. அவனுக்கு துணை செய்யும் மேலதிகாரியும் கூட. ஒரு சாதாரண எஸ்.ஐ. இந்த மாதரி செய்ய துணிவு இருக்காது. இன்னும் சொல்ல போனால் யாரவது அரசியல் வாதியும் உள்ளே நுழைந்து இருப்பான். உண்மையான, நேர்மையான போலீஸ் அதிகாரியாளாக, நீங்கள் அணுகிய நபர்கள் இருந்து இருப்பார்களேயானால் எப்போதே உங்களுக்கு நல்ல தீர்வு கிடைத்து இருக்கும். நீங்கள் வலிமையான மீடியாவில் இருக்கிறீர்கள். உங்களை சுற்றி எத்தனை நன்கு விஷயம் தெரிந்தவர்கள் இருந்தும் கூட உங்களுக்கே நியாயம் கிடைக்கவில்லை. பின்னே ஒரு சாதாரணமான மனிதருக்களுக்கு இந்த அரசியல் வாதிகளால் எப்படி நியாயம் கிடைத்துவிடுமா?. இதுதான் உண்மை நிலை. அதற்காக மனம் சோர்ந்துவிடாதீர்கள். உங்கள் பேட்டிக்கு பின்னால் தமிழக அரசுகூட உதவலாமே. நீங்கள் கூறியதுபோல் இறைஅருள் தண்டிக்கும். போராடுங்கள், வீழ்வது நீங்கலாக இருந்தாலும் வெல்வது உண்மையாக இருக்கட்டும்.
Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
02 மார், 2019 - 12:40 Report Abuse
Swaminathan Chandramouli பொதுவாகவே சினிமா உலகில் இதெல்லாம் சகஜம் பாலாஜி அவர்களே இந்த விஷ செடியை தாங்கள் முளையிலேயே கிள்ளி இருக்கலாம் . அதைப்பற்றி யோசிக்காமல் அறிந்தும் அறியாமல் நீங்கள் அந்த விஷ செடிக்கு நீர் வார்த்து மரமாக வளர்த்து விட்டீர்கள் . இது யார் தவறு ?. உங்களுக்கு மனோதிடம் இல்லை போல் தெரிகிறது
Rate this:
shankarvelu - watford,யுனைடெட் கிங்டம்
02 மார், 2019 - 21:16Report Abuse
shankarveluஇது remarriage பண்ணற ஆணோட பிரச்னை எல்லாரும் அவனை தான் தப்பு சொல்லுவாங்க என்ற பயம். but மனோதிடம் இல்ல அதுவும் சரிதான்...
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
01 மார், 2019 - 09:00 Report Abuse
கல்யாணராமன் சு. "போலீஸ்கார் மனோஜ் குமார் நித்யாவின் சில ரகசியங்களை தெரிந்துகொண்டு, என்னை மிரட்டிவருகிறார்" ........... நித்யா ரகசியம் தெரிந்தா, அவரைத்தான் மிரட்டுவாங்க? பாலாஜியை ஏன் மிரட்டணும்? லாஜிக் உதைக்கிறது ..............
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
01 மார், 2019 - 08:22 Report Abuse
Srinivasan Kannaiya நீங்களே பேசி தீர்த்து கொண்டு இருக்கலாம் ஆனால் குடும்ப சண்டையில் மூன்றாம் மனிதர் நுழைந்தாலே இதுதான் கெதி...
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  Tamil New Film Natpe Thunai
  • நட்பே துணை
  • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
  • நடிகை : அனகா
  • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in