Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நாடே உன்னுடன் இருக்கிறது : அபிநந்தனுக்கு திரைப்பிரபலங்கள் சல்யூட்

28 பிப், 2019 - 12:32 IST
எழுத்தின் அளவு:
Cinema-celebrities-voice-to-Abhinandan

இந்திய விமானப் படையைச் சேர்ந்த, அபிநந்தன் வர்தமான், பாகிஸ்தான் பிடியில் சிக்கி உள்ளார். அவரை பத்திரமாக மீட்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. அபிநந்தன் பத்திரமாக திரும்பி வர வேண்டும் என நாடு முழுக்க பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன.

டுவிட்டரில் அபிநந்தனை மையமாக வைத்து, #WingCommandarAbhinandan, #GivebackAbhinandhan, #AbhinandanMyHero என்ற பெயரில் ஹேஷ்டாக் டிரெண்ட்டிங்கில் உள்ளது. இந்நிலையில் அபிந்தன் பத்திரமாக திரும்ப வேண்டும் என சினிமா பிரபலங்களும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

சூர்யா

சகோதரர், விங் காமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு சல்யூட். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். தைரியமாக இரு, ஒட்டுமொத்த நாடும் உன்னுடன் இருக்கிறது. பத்திரமாக நாடு திரும்ப நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என சூர்யா பதிவிட்டுள்ளார்.

கார்த்தி

காற்று வெளியிடை படத்திற்காக எனக்கு பயிற்சியளித்து, பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தனின் தந்தை தான். அவருடன் இன்னும் சில வீரர்களுடன் பழக வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பாக்கியம். அவர் பாதுகாப்பாக திரும்ப பிரார்த்திக்கிறேன். ராணுவ வரர்கள் வீரத்துடன் தொடர்ந்து நம் நாட்டைக் காப்பாற்றுவதால் தான் நாம் அனைவரும் குடும்பத்துடன் நிம்மதியாக இருக்கிறோம் என்று டுவிட்டர் பதிவிட்டிருக்கிறார் கார்த்தி.

விஷால்

என் ஹீரோ அபிநந்தனுக்கு சல்யூட். அவர் வீரம், நம்பிக்கையின் முன்னுதாரணம். இந்திய விமானப்படை விமானிகள் அனைவரையும் இருகரம் கூப்பி வணங்குகிறேன். நம் நாட்டை இரவு, பகலாக காப்பதற்கு நன்றி என்று விஷால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன்

கணவனின் கடமையும்
தந்தையின் வீரமும்,

மனைவியின் மனதையும்
மகனின் கண்களையும்,

ஈரப்படுத்தாமல்
சேதப்படுத்தாமல்
எத்தனை நிமிடங்கள்
காக்கும்?

அதற்குள் காக்குமா
இந்தியா அந்த வீரத்
திருமகனை?

இவ்வாறு பார்த்திபன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சித்தார்த்

பயங்கரவாதிகள், நமது வீரர்களைக் கொன்றார்கள். நாம் அவர்களின் முகாம்களை அழித்தோம் (யாரும் பலியாகவில்லை என அவர்கள் மறுத்தாலும் தீவிரவாத முகாம்கள் இருப்பதை அவர்கள் மறுக்கவில்லை). நமது விமானியை சிறைபிடித்திருக்கிறார்கள். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது. இந்தியா ஆதரிக்கவில்லை. போர் எதையும் மாற்றாது, இது ராஜதந்திரம் அல்ல" என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
எல்கேஜி சக்சஸ் மீட்டும், பைக்கில் சென்ற இயக்குனரும்...எல்கேஜி சக்சஸ் மீட்டும், பைக்கில் ... திருவண்ணாமலையில் கல்வி மையம் அமைத்த கவுதமி திருவண்ணாமலையில் கல்வி மையம் அமைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

rishi - varanasi,இந்தியா
28 பிப், 2019 - 17:11 Report Abuse
rishi இந்தியாவே இருந்தாலும் ஆன்டி இந்தியன்ஸ் உங்கள் பக்கம் இல்லை போர் வந்தால்தான் இவர்களை வேட்டை அடமுடியும் , அல்லது தனிமை படுத்த முடியும், குறைந்த பட்சம் கட்டுப்படுத்த முடியும் , இவர்கள் இந்திய தோற்கவேண்டும் என்று ஆசை படும் தேச துரோகிகள் , இம்ரான் கான் பேச்சை ரசிக்கிறார்கள் , நம் பாதுகாப்பு அமைச்சரை, என்று கிண்டல் செய்கிறார்கள் , இந்தியாவில் உள்ள சிறுபான்மை தேச துரோகிகளை தனிமை படுத்த போர் வரவேண்டும் , அவர்களுக்கும் சேர்த்துதான் நம் வீரர்கள் உயிர் தியாகம் செய்கிறார்கள் ஆனால் அந்த அந்நிய நாட்டு அடிமைககள் அதை பொருள்படுத்துவது இல்ல , பாக்கிஸ்தான் இருக்கு தீவிரவாதிகள் இருக்கிறார்கள் நம்மை எப்படியும் காப்பாத்துவார்கள் என்ற நினைப்பில் தன இங்கு நம்மை கொலை செயகிறார்கள் .
Rate this:
Anvardeen - chennai,இந்தியா
28 பிப், 2019 - 14:05 Report Abuse
Anvardeen அர்ஜுன் எங்கப்பா அவரை அனுப்பி விடுங்க ஜெய் ஹிந்த்
Rate this:
Santhosh Kumar - male,மாலத்தீவு
28 பிப், 2019 - 13:30 Report Abuse
Santhosh Kumar என் சகோதரனே உனக்காக நாங்கள் பிரார்திக்கிறோம்
Rate this:
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
28 பிப், 2019 - 12:56 Report Abuse
Sathyanarayanan Bhimarao no
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in