90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? | ஹாலிவுட் வெப் தொடர் ரீமேக்கில் சமந்தா | மற்றுமொரு சர்வதேச விருது பெற்ற ஆர்ஆர்ஆர் | வெற்றி கலைஞனாக கடைசி மூச்சு அடங்க வேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம் | இந்தியாவில் முதல் முறை: சென்னை விமான நிலையத்தில் தியேட்டர் திறப்பு |
தமிழ் சினிமாவில் இந்தக் காலத்தில் ஒரு வெற்றிப் படத்தைக் கொடுப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று திரையுலகில் உள்ள அனைவருக்குமே தெரியும். ஒரு படத்தின் வெற்றியும், தோல்வியும் அதன் கேப்டனான இயக்குனரின் கையில்தான் உள்ளது. நல்ல கதைகளை சரியாக எடுக்காமல் தோல்வியிலும், சுமாரான கதைகளை சூப்பர்ஹிட் படமாக வெற்றியிலும் கொடுத்த பல இயக்குனர்கள் இருக்கிறார்கள்.
முன்பெல்லாம் ஒரு அறிமுக இயக்குனரின் படம் வெற்றி பெற்று வசூலைக் கொடுத்தால் அந்த இயக்குனருக்கு ஒரு சிறப்பான பரிசை படத்தின் தயாரிப்பாளரோ அல்லது கதாநாயகனோ வழங்குவார்கள். அதிலும் குறிப்பாக குறைந்த விலை கொண்ட கார் ஒன்றையாவது பரிசளிப்பார்கள். இப்போது அந்த வழக்கம் குறைந்து, நாயகனை மட்டுமே ஒரு படத்தின் வெற்றிக்குக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.
அது நேற்று நடந்த எல்கேஜி பட விழாவில் தெளிவாகத் தெரிந்தது. படத்தின் இயக்குனரைவிட மேடையில் பட நாயகன் ஆர்ஜே பாலாஜியைத்தான் அனைவரும் புகழ்ந்து தள்ளினார்கள். சமூக வலைத்தளங்களில் வந்த பல நகைச்சுவை கமெண்ட்டுகளை, அரசியலில் நடந்த நிஜ நிகழ்வுகளை அப்படியே கதை, திரைக்கதை, வசனமக எழுதிய பாலாஜியை புகழ்ந்ததில் தவறில்லை. ஆனால், அவர் எழுதிய அனைத்தையும் ஒரு திரைப்படமாக மேக்கிங்கில் சரியாகக் கொண்டு வந்தது இயக்குனர்தானே என்பதை பலரும் மறந்துவிட்டார்கள்.
நட்சத்திர ஓட்டலில் நடந்த விழா முடிந்த பின் படத்தின் இயக்குனர் கேஆர் பிரபு, ஒரு சாதாரண மனிதராக பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டது பத்திரிகையாளர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்த இயக்குனருக்கு தயாரிப்பாளரோ, நாயகனோ ஒரு காரை பரிசளித்திருக்கலாமே என்று அவர்கள் முணுமுணுத்துச் சென்றனர்.