Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியும், கமலும் கூட்டணி : விஷால் விருப்பம்

28 பிப், 2019 - 10:27 IST
எழுத்தின் அளவு:
I-wish-Rajini-sir-and-kamal-sir-come-together-says-Vishal

'மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலும், நடிகர் ரஜினியும் தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டும்' என நடிகர் விஷால் விருப்பம் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மையம் கட்சியைத் துவங்கி இருக்கும் நடிகர் கமல், தமிழகம், புதுச்சேரியில் இருக்கும் 40 லோக்சபா தொகுதி தேர்தலிலும் போட்டியிட முனைப்பு காட்டி வருகிறார். இதற்கிடையில் வரும் லோக்சபா தேர்தலில், தான் போட்டியிடப் போவதில்லை என்றும், தமிழக சட்டசபைத் தேர்தல் தான், தங்களது இலக்கு என்றும் ரஜினி அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில், 'மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலும், நடிகர் ரஜினியும் தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டும்' என நடிகர் விஷால் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'நடிகர்கள் ரஜினியும், கமலும் சேர்ந்து வர வேண்டும். இது நடிகர் சங்க விழாவுக்கோ, எந்த நடிகரின் வரவேற்புக்கோ, வேறு எதற்குமே அல்ல. அவர்கள் வரவுள்ள லோக்சபா தேர்தலுக்கு சேர்ந்து வர வேண்டும். அது மாற்றத்தைக் கொண்டு வரும் நடவடிக்கையாக அமையும்' என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
சீனாவில் வெளியாகும் ஸ்ரீதேவியின் மாம்சீனாவில் வெளியாகும் ஸ்ரீதேவியின் ... ரிலீஸ் தேதி விவகாரம்... உடன்படாத விஜய் ரிலீஸ் தேதி விவகாரம்... உடன்படாத விஜய்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Raman Ganesan - Madurai,இந்தியா
28 பிப், 2019 - 12:24 Report Abuse
Raman Ganesan p.balasubramaninan நீங்க முதல் போடுங்க
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
28 பிப், 2019 - 12:23 Report Abuse
Raman Ganesan மானமுள்ள தமிழன் இப்ப உள்ள எந்த கட்சிக்கும் போட மாட்டான்
Rate this:
R Sanjay - Chennai,இந்தியா
28 பிப், 2019 - 12:20 Report Abuse
R Sanjay இந்த ரெண்டு கூத்தடிகளும் சேர்ந்து என்ன செய்துவிட்டார்கள் இவர்கள் கூட்டணி அமைக்க, அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை கமல் படத்தில் நடித்த நடிகையை ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்கவைப்பார். ரஜினி கொண்டு வந்த நடிகையை கமல் அவரின் அடுத்த படத்தில் நடிக்கவைப்பார். நடிப்போடு பல விஷயங்களையும் இருவருமே அந்த அந்த நடிகைகளுக்கு கற்றுக்கொடுப்பார்கள். இதை தவிர இவர்களுக்கு வேறு என்ன தெரியும். இவர்கள் நேராக போகவேண்டிய இடம் ஜப்பான். அங்கு சென்று இரண்டு பெரும் பூச்சாண்டி காட்டலாம்.
Rate this:
Sathya - Madurai,இந்தியா
28 பிப், 2019 - 12:18 Report Abuse
Sathya The Common goal for both the actors is to eradicate bribes and to provide a good government.As Rajini is not contesting the forthcoming Lok Sabha polls, he can give his wholehearted support to Kamal to achieve their goals.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
28 பிப், 2019 - 12:13 Report Abuse
Aarkay அந்த இமாலய தவறை மட்டும், ரஜினி செய்யமாட்டார் என்றே நம்புகிறோம் கமல் என்னதான் ஓலமிட்டாலும், அடித்தட்டு மக்களின், ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதியாக காட்டிக்கொள்ள முயற்சித்தாலும், அவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை இதுநாள்வரை, எச்சில் கையால் காக்காவைக்கூட ஓட்ட முயற்சிக்காதவர் இன்று, அவர்களுக்காக முதலைக்கண்ணீர் vadippathai, மற்றுமொரு worth Oscar winning performance என்றுதான் பார்க்க தோன்றுகிறதே தவிர, நம்ப முடியவில்லை கமலை நம்பி, ரஜினி இறங்கமாட்டார் என்றே நினைக்கிறேன் அரசியல் செய்வது எவ்வளவு கடினம் என்பதை உலகநாயகன் இந்த தேர்தலுக்குப்பிறகு புரிந்து கொள்வார்.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in