இமயமலை பாபாஜி குகையில் தியானம் செய்த ஆத்மிகா | துல்கர் சல்மானின் ‛லக்கி பாஸ்கர்' | விஜய்யின் ‛லியோ' படத்திற்கு ஆளும் கட்சி மிரட்டலா? - தயாரிப்பாளர் மறுப்பு | 50வது படத்தின் படப்பிடிப்பு : அஞ்சலி மகிழ்ச்சி | தரத்திற்காக தள்ளிப் போன 'அயலான்' | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு ரத்து : காரணம் என்ன? | 'கமெண்ட்' ஆப் செய்து ஏஆர் ரஹ்மான் டுவீட் | ஹிந்தி நடிகை பரிணீதி சோப்ரா திருமணம் | 'சந்திரமுகி 3' நடந்தால் ரஜினிகாந்த் நடிப்பாரா ? | விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு |
பிரபு தேவா நடித்து வரும் படம் எங் மங் சங். இதனை வாசன் விஷூவல் வென்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரிக்கிறார்கள். லட்சுமி மேனன் ஹீரோயின். அவர் கையில் உள்ள ஒரே படம் இதுதான். இவர்கள் தவிர தங்கர் பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, காளி வெங்கட், முனீஷ்காந்த், மாரிமுத்து உள்பட பலர் நடிக்கிறார்கள். பாகுபலி வில்லன் பிரபாகர் வில்லனாக நடிக்கிறார். எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் பிரபுதேவா, கராத்தே, குங்பூ சண்டை கலைஞராக நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் கும்பகோணம், பொள்ளாச்சி பகுதியில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் ஆந்திரா மற்றம் கர்நாடகாவில் நடந்தது. இறுதிகட்ட படப்பிடிப்புகள் சீனாவில் உள்ள டெங் லெங் என்ற இடத்தில் நடந்தது.
ஸ்டண்ட் சில்வா, சீனா சண்டைக் கலைஞர்களுடன் இணைந்து சண்டை காட்சிகளை படமாக்கினார். இது 1980களில் நடப்பது மாதிரியான கதை. அதனால் சீனா 1980களில் எப்படி இருந்தது என்பதை அந்த ஊர் கலைஞர்களை கொண்டு ஷெட் போட்டு காட்சிகள் படமாக்கப்பட்டது.