Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் என்ன நிர்வாணமாகவா நடித்தேன்: ஓவியா ஆவேசம்

27 பிப், 2019 - 09:00 IST
எழுத்தின் அளவு:
Did-i-acted-as-Nude-:-Oviya

நடிகை ஓவியா நடித்துள்ள 90 எம்எல் படம் நாளை மறுநாள் வெளிவருகிறது. இதில் அவர் லிப்லாக் முத்தக்காட்சி, மது அருந்தும் காட்சி, புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்துள்ளார். மேலும் இரட்டை அர்த்தம் வசனங்கள் நிறைந்த அடல்ட் படமாக இந்தப்படம் உருவாகி இருப்பதால் கடும் விமர்சனத்த்திற்கும் உள்ளானார். இதுகுறித்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:


ஐந்து பெண்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அவர்கள் ஆசைப்படும் வாழ்க்கையை வாழ்வது தான் 90எம்எல் படம். இதில் ரீட்டா என்கிற பியூட்டி பார்லர் நடத்தும் பெண்ணாக நடித்திருக்கிறேன். பெண்கள் ஏன் பயந்து பயந்து வாழ வேண்டும் என்பது தான் இந்தப்படம் பேசுகிறது.

படத்தில் ஓவியா டபுள் மீனிங் பேசவில்லை, ரீட்டா என்ற கேரக்டர் தான் பேசியிருக்கிறார். பிக்பாஸில் எனக்கு கிடைத்த பெயர், புகழுக்காக நான் இப்படி செய்யவில்லை. யாருக்கும் பயந்து வாழ்பவள் கிடையாது. நல்ல பெயருக்காக சுடிதார் போட்டு என்னால் நடிக்க முடியாது, அது எனக்கே போரடித்துவிடும். தனிப்பட்ட வாழ்க்கையில் நான் எந்த தவறும் செய்யவில்லை.

நிஜத்தில் குடிப்பது சுலபம், ஆனால் குடித்த மாதிரி நடிப்பது ரொம்பவே கஷ்டம். இதற்கும் சேர்த்து எனக்கு விருது கொடுக்க வேண்டும். இது பொழுதுபோக்கான படம் மட்டுமே, வேறு எந்த நோக்கமும் இல்லை. என் பெயர் கெட்டுப்போகும் அளவுக்கு ஒன்றும் இருக்காது. ஜாலியான படம் முத்தக்காட்சி கூட படத்தில் இருக்கும். ஒருவருக்கு ஒருவர் ஒப்புதலோடு முத்தம் கொடுத்தால் தப்பு இல்லை. விருப்பமில்லாமல் ஒருவரை தொடுவது தவறு தான். படத்தில் இடம் பெற்ற வசனத்தில் நான் தலையிடவில்லை. இயக்குனர் என்ன சொன்னாரோ அதை செய்தேன். ஆரவ் உடன் நட்பு இருக்கு, ஆனால் திருமணம் யோசனை இல்லை.



ஆண்கள் செய்கிற அனைத்தையும் பெண்களும் செய்ய உரிமை உண்டு என்கிற படம். ஆண்கள் மது அருந்துகிற, புகைபிடிக்கிற காட்சிகளில் நடிக்கும்போது எதிர்க்காதவர்கள் அதையே பெண்கள் செய்யும்போது ஏன் எதிர்க்க வேண்டும். ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா. சில மாதங்களுக்கு முன்பு வரை நான் சிகரெட் புகைத்தேன். அது என் உரிமை, இப்போது உடல்நிலை கருதி நிறுத்தி விட்டேன். அதுவும் என் உரிமை இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.

90 எம்எல் டீசர் பார்த்து விட்டு ஏன் இத்தனை விமர்சனம் என்று எனக்குத் தெரியவில்லை. நான் இந்தப் படத்தில் நிர்வாணமாகவா நடித்து விட்டேன். கற்பழிப்பு காட்சியில்கூட நடிக்கவில்லை, முத்தம் கொடுப்பது அவ்வளவு பெரிய தப்பா. நான் கவர்ச்சியாக நடித்திருப்பது உண்மை. ஆனால் ஆபாசமாக நடிக்கவில்லை. ஆபாசத்துக்கும், கவர்ச்சிக்கும் என்ன வேறுபாடு என்பது பார்ப்பவர்களில் பார்வையை பொறுத்தது. என் ரசிகர்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியும், அதை கொடுக்க வேண்டியது என் கடமை. அதைச் செய்திருக்கிறேன்.

நான் நடித்த கேரக்டருக்கு என்ன தேவையோ அதைச் செய்திருக்கிறேன். அதை தாண்டி ஒரு காட்சி நடித்திருந்தால் என்னை கேள்வி கேளுங்கள். 90 எம்எல் படத்தில் அல்ட்ரா மார்டன் பொண்ணு, அதனால் குறைவான ஆடை அணிந்து நடித்திருக்கிறேன். என் காதல் பற்றி தொடர்ந்து கேட்கிறார்கள். அது ஊருக்கே தெரியும். காதலில் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. திருமணத்தில் நம்பிக்கை இல்லை. சிலபேர் என்னை அரசியலுக்குகூட கூப்பிட்டார்கள். அடபோங்கப்பா எனக்கு சினிமாவில் நிறைய வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டேன். என்றார் ஓவியா.

Advertisement
கருத்துகள் (27) கருத்தைப் பதிவு செய்ய
காமெடி கலந்த நாயகியாக நிவேதா பெத்துராஜ்காமெடி கலந்த நாயகியாக நிவேதா ... தங்கையை களமிறக்கும் சாய் பல்லவி தங்கையை களமிறக்கும் சாய் பல்லவி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (27)

Shroog - Mumbai ,இந்தியா
01 மார், 2019 - 04:48 Report Abuse
Shroog இவளது படத்தை வெளியிட அனுமதித்த சென்சார் போர்டை சொல்ல வேண்டும். அசிங்கமான பேச்சு. எந்த பெண்கள் இப்படி பேசும். ?? கேட்டால், அந்த படத்தின் டைரக்டர் சொல்லுகிறார், பெண்கள் கூட்டம் இப்படி தான் பேசும் என்று, இந்த ஓவியாவை நடு ரோட்டில் வைத்து செருப்பால் அடிக்க வேண்டும். அந்த தைரியம், எந்த ஆணுக்காவது உண்டா??
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
28 பிப், 2019 - 08:29 Report Abuse
கல்யாணராமன் சு. இவருடைய பேட்டியை படிக்கும்போது உண்டாகும் குழப்பம் (due to constant and consistent rambling), இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஒரு முக்கியமான பதவியை வகிக்க தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்துகிறது
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
28 பிப், 2019 - 05:15 Report Abuse
 nicolethomson நீ போடும் உடையை உன்னோட அம்மா தான் செலெக்ட் பன்றாளோ? அல்ட்ரா மாடர்ன் என்ற பெயரில் உன்னோட ஊருல கூத்தடி கண்டுகளி , எங்க ஊர்க்கு வந்து ஏன் பெண்களோட பேரை கெடுக்குற?
Rate this:
P Sundaramurthy - Chennai,இந்தியா
27 பிப், 2019 - 20:36 Report Abuse
P Sundaramurthy நீ அப்படியே நடித்தாலும் ஒன்றும் குறைந்துவிடாது . சமத்துவம் பேசுபவர்கள் ஏன் மீ டு என்று ஒப்பாரி வைக்கிறீர்கள் . இயற்கையின் படைப்பை புரிந்து கொண்டால் எதிலும் சிக்கல் வராது . எதோ உலகத்தை அழிந்துவிட்டது போல் நினைவு வந்தால் வாழ்வே நாசமாகிவிடும் .
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
27 பிப், 2019 - 18:58 Report Abuse
Vasudevan Srinivasan கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் வித்தியாசம் ரொம்ப அதிகமில்லைதான்..
Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in