Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழக வீரர் குடும்பத்துக்கு ஹரிஷ் உதவி

26 பிப், 2019 - 13:25 IST
எழுத்தின் அளவு:
Harish-Kalyan-helps-to-TN-Brave-jawan

நடிகர் ஹரிஷ் கல்யாண், காஷ்மீரின் புல்வாமா மாவட்ட தாக்குதலில், இறந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு, தலா ஒரு லட்ச ரூபாய் லட்சம் கொடுத்து உதவி உள்ளார்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பிப்., 14ல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி, பயங்கரவாதிகளின் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதில், அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியைச் சேர்ந்த சுப்ரமணியன் ஆகியோரும் அடங்குவர்.

உயிர் இழந்தவர்களின் உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும், தமிழக அரசு இரு குடும்பத்தாருக்கும் தலா 20 லட்சம் நிதி உதவி மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் சுப்ரமணியனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார். இதேபோலவே, சிவசந்திரன் வீட்டுக்கும் அவர் செல்வார் என, அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இரட்டை வேடத்தில் கே.ஆர்.விஜயாஇரட்டை வேடத்தில் கே.ஆர்.விஜயா நிறைவேறியது சத்யராஜ் மகள் கனவு நிறைவேறியது சத்யராஜ் மகள் கனவு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
26 பிப், 2019 - 16:10 Report Abuse
Vasudevan Srinivasan நல்ல விஷயம் ஆனால் ஒரு சிறிய வேண்டுகோள் இப்படிப்பட்ட உதவிகளை தமிழர், கன்னடனர், தெலுங்கர் என்றெல்லாம் பார்க்காமல் அனைத்து வீரர்களுக்கும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.. ஹரிஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in