Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிருஷ்டி டாங்கேவுக்கு கை கொடுப்பாரா சத்ரு

26 பிப், 2019 - 12:19 IST
எழுத்தின் அளவு:
Did-Chatru-will-give-success-to-Srushti-Dange

மும்பையிலிருந்து நேரடியாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர் சிருஷ்டி டாங்கே. காதலாகி, யுத்தம் செய் படங்களில் சிறு கேரக்டரில் நடித்தவர், மேகா படத்தின் மூலம் சோலோ ஹீரோயின் ஆனார். தமிழ் சினிமாவுக்கு கன்னக்குழி அழகிகள் அபூர்வமாகத்தான் அமைவார்கள். அதனால் சிருஷ்டி டாங்கே ஒரு ரவுண்ட் வருவார் என்றே கணித்தார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை.

அவர் நடித்த டார்லிங், தர்மதுரை படங்கள் வெற்றிப் படங்களாக இருந்தாலும் அவற்றில் அவர் ஹீரோயின் இல்லை. ஹீரோயினாக நடித்த கத்துக்குட்டி, அச்சமின்றி, நவரச திலகம், உள்ளிட்ட பல வெற்றி பெறவில்லை. எனக்குள் ஒருவன், படத்தில் வில்லியாக நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள காலக்கூத்து, பொட்டு படங்கள் வெளிவரவில்லை.

தற்போது அவர் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது சத்ரு படத்தை. இதில் அவர் கதிருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். நவீன் நஞ்சுண்டான் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். இது 24 மணி நேரத்தில் நடக்கிற பரபர ஆக்ஷன் த்ரில்லர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தம்பி நடித்த காதல் காட்சியில் அண்ணன் சாருஹாசன்தம்பி நடித்த காதல் காட்சியில் ... மீண்டும் ஒரு பள்ளி காதல் படம் மீண்டும் ஒரு பள்ளி காதல் படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bhaskaran - Chennai,இந்தியா
01 மார், 2019 - 03:49 Report Abuse
Bhaskaran அந்த கால கம்யூனிஸ்ட் தலைவர் டாங்கேயின் உறவினரா இந்த அம்மா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in