Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மார்ச் 8க்கு தள்ளிப்போன 'பூமராங்'

26 பிப், 2019 - 10:46 IST
எழுத்தின் அளவு:
Boomerang-postponed-to-March-8

பட்ட காலிலேயே படும் என்ற பழமொழி இயக்குநர் ஆர்.கண்ணனுக்குப் பொருந்தும். இவருடைய முந்தைய படமான 'இவன் தந்திரன்'படம் வெளியானபோது திரையுலக ஸ்டிரைக்கை அறிவித்து, அந்தப்படத்தை திரையுலகை சேர்ந்த அமைப்புகளே காலி பண்ணின. அதனால் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து ஒரு வழியாக மீண்டு அதர்வா, மேகா ஆகாஷ் கதாநாயகன் கதாநாயகியாக நடித்திருக்கும் பூமராங் என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் இவர்களுடன் உபேன் பட்டேல் சுஹாசினி மணிரத்னம், இந்துஜா, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஏற்கெனவே சில ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அந்த தேதிகளில் ரிலீசாகாமல் இருந்த நிலையில் கடைசியாக மார்ச் 1-ஆம் தேதி பூமராங் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

படவெளியீட்டுக்கான ஆயத்த பணிகளில் ஆர்.கண்ணன் ஈடுபட்டிருந்த நேரத்தில் பூமராங் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமயை வாங்கிய விநியோகஸ்தர், தியேட்டர் கிடைக்கவில்லை என்ற காரணத்தைச் சொல்லி இப்படத்தின் ரிலீஸை மீண்டும் ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்துவிட்டார்.

அதாவது மார்ச் 1 ஆம் தேதி வெளிவர வேண்டிய படத்தை மார்ச் 8-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். மார்ச் 1-ஆம் தேதி ஓவியாவின் '90ML' என்ற ஆபாசப்படம் வெளியாகிறது. அதனால் பூமராங் படத்துக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்று சொன்ன அந்த விநியோகஸ்தர்தான், '90ML' படத்தையும் தமிழகம் முழுக்க வெளியிடுகிறார்.

தன்னுடைய ஒரிஜினல் பேனரான டிரடண்ட் ஆர்ட்ஸ் பெயரில் வெளியிடாமல், ப்ளமிங்கோ என்ற வேறு பெயரில் வெளியிடுகிறார். இந்த விநியோகஸ்தரிடம் மாட்டாமல் தப்பித்ததால், அருண் விஜய்யின் 'தடம்' சேரனின் 'திருமணம்', சாருஹாசன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் 'தாதா-87', மற்றும் 'மான்சி' முதலான படங்கள் மார்ச் 1ஆம் தேதியே திட்டமிட்டபடி வெளியாகின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மற்ற நடிகர்களின் படத்துக்காகவே வேறு பேனர்மற்ற நடிகர்களின் படத்துக்காகவே வேறு ... சம்பளத்துக்கு பதில் ஆடம்பர பங்களா சம்பளத்துக்கு பதில் ஆடம்பர பங்களா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in