சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் மே 1ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்திலும் நடித்து வருகிறார்.
அதைத் தொடர்ந்து 'இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் (எஸ்.கே.,15) நடிக்கவிருக்கிறார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கும் நிலையில், அர்ஜுன் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதில் பாலா இயக்கிய 'நாச்சியார் படத்தின் மூலம் அறிமுகமான இவானா மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதை, இவானாவின் பிறந்த நாளில், அப்படகுழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு, வரும் மார்ச் மாதம் தொடங்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.