‛விடுதலை'-க்காக இளையராஜா இசையில் பாடிய தனுஷ் | ‛மைக்கேல்' விமர்சனம் : அனைவரையும் திருப்திபடுத்தும் படைப்பு இல்லை - ரஞ்சித் ஜெயக்கொடி | 'ஏகே 62' இந்த வாரம் அறிவிப்பு வருமா ? | இன்ஸ்டாவில் சண்டை : கடுப்பாகி எச்சரித்த சீரியல் நடிகை | ஷிவின் வெற்றி பெற்றிருந்தால்...? மனம் திறக்கும் கதிர் | படிக்கதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோம்! டிடி வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் அட்வைஸ் | வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்' | 800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் |
தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஆச்சரியங்கள் நடக்கும், எந்தப் படம் வெற்றி பெறும், எந்தப் படம் தோல்வியுறும் என்று யாராலும் கணிக்க முடியாது. அதிக எதிர்பார்ப்பில்லாமல் கடந்த வாரம் வெளிவந்த 'எல்கேஜி' படம் அதனுடன் வெளிவந்த படங்களை பின்னுக்குத் தள்ளி வசூலில் முன்னணி பெற்று ஆச்சரியப்படுத்தி உள்ளது.
'டு லெட்' தேசிய விருது பெற்ற படம் என்பதால் அதற்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். 'எல்கேஜி' படத்திற்குப் போட்டியாகச் சொல்லப்பட்ட 'கண்ணே கலைமானே' படம் குடும்பப் படமாக அமைந்தது. மேலும் எதிர்பார்த்த அளவில் படம் இல்லாமல் போனதும் எதிர்பார்த்த வசூலைக் குவிக்கவில்லை. 'பெட்டிக்கடை' படம் சிறிய பட்ஜெட் படம்தான்.
கடந்த மூன்று நாட்களிலேயே 'எல்கேஜி' படம் சுமார் 8 கோடியை வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள். அடுத்த சில நாட்களில் இப்படம் லாபத்தைத் தந்துவிட வாய்ப்புள்ளதாம். விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் நகைச்சுவை இருந்ததால் அது படத்தைக் காப்பாற்றிவிட்டது என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
சீக்கிரத்திலேயே நாயகனாக அடியெடுத்து வைத்த பாலாஜிக்கு இந்தப் படம் மெஜாரிட்டியான வெற்றியைக் கொடுத்துள்ளது. இந்த வெற்றியால் மீண்டும் அவர் நாயகனாக மட்டுமே தொடர்வார் என்றே எதிர்பார்க்கலாம்.