இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால் | மாமனிதன் படத்திற்கு மேலும் 4 சர்வதேச விருதுகள் | ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது | சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் - விஜய் தேவரகொன்டா | தோல்விப் பட வரிசையில் அக்ஷய்குமாரின் 'ரக்ஷா பந்தன்' | வெள்ளித்திரையில் ‛விடுதலை' வேட்கை | இன்னும் ஓராண்டாகும் : ‛சலார்' புது ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்குப் படத்தை நிறுத்திவிட்டு வருகிறாரா ஷங்கர்? | திருவண்ணாமலையில் தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா | ‛திருச்சிற்றம்பலம்' படத்தை பார்த்த தனுஷ் |
தமிழ் சினிமாவில் ஒரே குடும்பத்தில் அண்ணன், தம்பி இருவரும் முன்னணி நடிகர்களாக இருப்பது ஆச்சரியமான விஷயம் தான். நடிகர் சிவகுமாரின் மகன்கள் சூர்யா, கார்த்தி இருவருக்கும் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க மார்க்கெட் உண்டு. ஆனால், இருவருமே பெரும்பாலும் அவர்களது சொந்த நிறுவனங்கள் அல்லது அவர்களது உறவினர்களின் நிறுவனங்களில் மட்டுமே நடித்து வருவது திரையுலகத்தில் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது.
கார்த்தி நடிக்கும் 19வது படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. அந்தப் படத்தையும் அவரது உறவினர் நிறுவனமான டிரீம் வாரியர் பிக்சர்ஸ்தான் தயாரிக்கிறது. கார்த்தியின் 18வது படத்தையும் அந்த நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இதற்கு முன் கார்த்தி நடித்த, “தீரன் அதிகாரம் ஒன்று, காஷ்மோரா, சகுனி” படங்களையும் இந்த நிறுவனம்தான் தயாரித்தது.
கார்த்தி நடித்த, “கொம்பன், மெட்ராஸ், பிரியாணி, அழகுராஜா, அலெக்ஸ் பாண்டியன், சிறுத்தை, நான் மகான் அல்ல, பருத்தி வீரன்” ஆகிய படங்களை கார்த்தியின் மற்றொரு உறவினரான கே.ஈ.ஞானவேல்ராஜாவின் நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் தான் தயாரித்தது. கடந்த ஆண்டின் வெற்றிப்படமான 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரித்திருந்தார்.
சமீபத்தில் வெளிவந்த கார்த்தி நடித்த 'தேவ்' படத்தை அவரின் நெருங்கிய நண்பர் லட்சுமண் தயாரித்திருந்தார்.
கார்த்தி இதுவரை நடித்து வெளிவந்த 17 படங்களில் 13 படங்கள் அவருடைய உறவினர்கள் தயாரித்தது. ஒரு படம் நண்பர் தயாரித்தது. மற்ற படங்களான, “ஆயிரத்தில் ஒருவன், பையா, தோழா” ஆகிய மூன்று படங்களை மட்டுமே வேறு தயாரிப்பாளர்கள் தயாரித்தனர்.
தமிழ் சினிமாவில் வேறு எந்த ஒரு நடிகரும் இப்படி உறவினர்களின் படங்களில் அதிகமாக நடித்ததில்லை. கார்த்தி மற்ற தயாரிப்பாளர்களின் தயாரிப்பிலும் நடிக்க வேண்டும் என்று திரையுலகத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.