எனக்கு மரணமும் நிகழலாம் - பாலா உருக்கம் | அடம்பிடித்த சிறுமி : வீடியோ காலில் வந்து இன்ப அதிர்ச்சி தந்த விஜய் | நீச்சல் குளத்தில் போட்டோசூட் நடத்திய ஷிவானி | தங்கலான் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்த விக்ரம் | மாறிமாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ் - சூரி | லியோ அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும்? | போனில் மட்டும் பேசு : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குநர் | எதிர்நீச்சல் தொடரில் 10 ஆண்டுகள் கூட நடிப்பேன் : மதுமிதா மகிழ்ச்சி | தீபிகா படுகோனின் ஜிம் மேட்டாக மாறிய ஐஸ்வர்யா மேனன் | 17 வருடங்களுக்கு பிறகு 2ம் பாகத்திற்காக இணைந்த சுரேஷ் கோபி - ஜெயராஜ் |
சமீபத்தில் வெளியான டூ லெட் படத்தில் கதையின் நாயகனான நடித்தவர் சந்தோஷ் ஸ்ரீராம். அடிப்படையில் இவர் ஒளிப்பதிவாளர். டூ லெட் இயக்குனர் செழியனிடம் உதவி கேமராமேனாக பணியாற்றி விட்டு அதன் பிறகு கருப்பம்பட்டி, கத்துக்குட்டி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அதன் பிறகே தனது குரு நாதர் படத்தில் நடித்தார். படத்தில் படவாய்ப்பு தேடும் உதவி இயக்குனராகவும், வாடகைக்கு வீடு தேடும் குடும்பத் தலைவனாகவும் நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார்.
ஆனால் சத்தமே இல்லாமல் 3 படங்களில் ஹீரோவாதிக நடித்து வருகிறார். அவரது அண்ணன் பிரேம்சந்த் நம்பிராஜன் இயக்கும் அனங்கன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இது துப்பறியும் கதை. இதுதவிர மதிவதனி என்ற படத்திலும் புதுமுக இயக்குனர் வினோத் இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். "ஆக்ஷன் ஹீரோ, மாஸ் ஹீரோ என்கிற பக்கம் போகாமல் எளிய மனிதர்களை கதையை சொல்லும் யதார்த்த படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்" என்கிறார் சந்தோஷ்.