Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

"அம்மன், அருந்ததி" புகழ் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்

22 பிப், 2019 - 17:03 IST
எழுத்தின் அளவு:
Telugu-filmmaker-Kodi-Ramakrishna-pasess-away

தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா(64) காலமானார். நுரையீரல் தொற்று நோய் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு, சில தினங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கோடி ராமகிருஷ்ணா. கடந்த இருதினங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்த வந்த இவர், சிகிச்சை பலன் இன்றி இன்று(பிப்.,22) இறந்தார்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் உள்ள பாலகொள்ளுவில் பிறந்தவர் கோடி ராமகிருஷ்ணா. சிரஞ்சீவி, மாதவி நடித்த, "இன்ட்லோ ராமய்யா வெதிலோ கிருஷ்ணய்யா" படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் இயக்குநராக அறிமுமான இவர், அதன்பின்னர் தெலுங்கு சினிமாவின் பல முன்னணி நடிகர்களை வைத்து ஏராளமான படங்களை இயக்கி உள்ளார். இந்தமாதிரி படம் எடுப்பேன் என குறுகிய வட்டத்திற்குள் சிக்காமல் குடும்பம், சமூகம், பேன்டஸி என பல வகையான படங்களை எடுத்து அசத்தியவர்.

இவர் இயக்கிய, அம்மொறு, தமிழில் அம்மன் என்ற பெயரில் வெளிவந்து சக்க போடு போட்டது. அனுஷ்காவின் திரை வாழ்வில் முக்கிய திருப்புமுனை படமாக அமைந்த அருந்ததி படம் இவரது படைப்பு தான். தெலுங்கில் அதிக படங்கள் இயக்கியிருந்தாலும் மற்ற தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் ஓரிரு படங்கள் இயக்கி உள்ளார். இயக்குநராக மட்டுமல்லாது ஓரிரு படங்களில் நடிகராகவும் தலைகாட்டியிருக்கிறார். 2012ம் ஆண்டு ஆந்திர அரசின் உயரிய விருதான நந்தி விருதை பெற்றுள்ளார்.

கடைசியாக இவர் இயக்கிய நாகராஹவு படத்தில், மறைந்த கன்னட நடிகர் விஷ்ணுவர்தனை, கிராபிக்ஸ் கொண்டு உருவாக்கி மீண்டும் திரையில் தோன்ற வைத்த பெருமை இவருக்கு உண்டு.

30 ஆண்டுகளாக திரைவாழ்வில் ஜொலித்து, 100 படங்களை இயக்கிய கோடி ராமகிருஷ்ணாவின் மறைவு, தெலுங்கு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. திரைப்பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு நாளை(பிப்., 22) நடைபெறுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ராதிகா ஆப்தே வெளியிட்ட அதிரடி புகைப்படம்ராதிகா ஆப்தே வெளியிட்ட அதிரடி ... திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடுகிறார் லட்சுமி மேனன் திருமணத்திற்கு மாப்பிள்ளை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
23 பிப், 2019 - 16:28 Report Abuse
Vasudevan Srinivasan சரத்குமார் நடித்த கேப்டன் படம் இவர் இயக்கியதே.. மேலும் முக்கியமாக வைஜெயந்தி ஐ.பி.எஸ் படமும் இவரது சூப்பர் ஹிட்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in