Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குநருக்கு முத்தம் கொடுத்த தமன்னா

22 பிப், 2019 - 14:59 IST
எழுத்தின் அளவு:
Tamanna-gave-kiss-to-director

'கண்ணே கலைமானே' படம் மிக நன்றாக வந்திருப்பதற்காக, இயக்குநருக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்' என பட நாயகியான தமன்னா தெரிவித்துள்ளார். சீனு ராமசாமி இயக்கிய 'கண்ணே கலைமானே' படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்துள்ளார் தமன்னா. இந்தப்படம் இன்று(பிப்., 22) வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் நடித்தது குறித்து தமன்னா கூறுகையில், 'கண்ணே கலைமானே' படம் முழுமையான காதல் கதை. எனக்கு வங்கி அதிகாரி வேடம். உதயநிதிக்கு இணையாக, எனக்கும் வலுவான கதாபாத்திரம், இந்த படத்தில் அமைந்துள்ளது. படத்தை திரையில் பார்த்து அழுது விட்டேன். படப்பிடிப்பில், எனது நடிப்பை சீனு ராமசாமி பாராட்டினார். நான் சிறப்பாக நடித்ததற்காக திருநெல்வேலி அல்வாவையும் கொடுத்தார். அது எனக்கு பெரிய பரிசாக தெரிந்தது.

இயக்குநர் சீனு ராமசாமி படங்களில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும். 'தர்மதுரை' படத்தில், அதை உணர்ந்தேன். 'கண்ணே கலைமானே' படத்திலும், அந்த வலிமை இருக்கிறது. படம் சிறப்பாக வந்ததற்காக, அவருக்கு நான் முத்தம் கொடுத்தேன். விருதுகளை நான் எதிர்பார்த்து நடிப்பது இல்லை. ரசிகர்கள் பாராட்டினால், அதுவே விருது.

படத்தில் கவர்ச்சி இருக்கிறது. ஆனால், உடல் கவர்ச்சியாக அது இருக்காது. முகத்தில்தான் அந்த கவர்ச்சி தெரியும். நான், தமிழ் நன்றாக பேசுவதாக ஆச்சரியப்படுகின்றனர். நானும், தமிழ் பெண்தான். தமிழ்நாட்டில், பொருத்தமான மாப்பிள்ளை அமைந்தால், திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன். இதை வாய் வார்த்தையாக சொல்லவில்லை; நிஜமாகவே சொல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கவர்ச்சி உடை; பெருமை பேசும் வேதிகாகவர்ச்சி உடை; பெருமை பேசும் வேதிகா கன்னடத்திலும் வெளியாகும் 'விஸ்வாசம்' கன்னடத்திலும் வெளியாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Kumar - Chennai,இந்தியா
24 பிப், 2019 - 03:53 Report Abuse
Kumar மீ டு ல வரப்போவுது.
Rate this:
karutthu - nainital,இந்தியா
23 பிப், 2019 - 12:04 Report Abuse
karutthu சீனு ராமசாமிக்கு ஒன்று என்றால் கதாநாயகனுக்கு எவ்வளவு என்று சொல்லமுடியுமா ?
Rate this:
Karunan - udumalpet,இந்தியா
24 பிப், 2019 - 12:32Report Abuse
Karunanகொடுக்கிறமாதிரிஆ இருக்கிறார் ?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in