Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பெயரோடு பச்சன் எப்படி வந்தது? : அமிதாப் விளக்கம்

22 பிப், 2019 - 14:00 IST
எழுத்தின் அளவு:
Amitabh-replied-how-bachchan-is-added-in-his-name

சர்வதேச விளம்பர சங்கத்தின் 44வது உலக மாநாடு, கொச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

என்னுடைய தந்தையின் பெயர் ஹரிவான்ஷ் ராய் ஸ்ரீவஸ்தவ். இந்தியாவில் ஒருவரது துணைப் பெயர் என்பது, அவரது ஜாதியைக் குறிக்கும். இதனால், ஒருவரது துணைப் பெயரை வைத்தே, அவர் எப்படி என்று மற்றவர்கள் கருத்து தெரிவித்து விடுவார்கள். நீ பிராமணன்; நீ தலித்; நீ ஷத்ரியன் என்று பலரும் பலவகையில் பேசுவார்கள். ஒருவரது திறமையை மறைத்துவிட்டு, மக்களிடையே பிரிவுகளை உண்டாக்கும் இந்த அமைப்பை என் தந்தை வெறுத்தார்.

அதனால், என் தந்தை, தனது ஜாதி பெயரை நீக்கிவிட்டு, ஹரிவான்ஷ் ராய் பச்சன் என்று பெயர் மாற்றிக் கொண்டார். இதனால், பச்சன் என்பது குடும்பப் பெயராக மாறியது. ஜாதியையும், ஜாதி அடிப்படையிலான கருத்துகளையும் நிராகரிப்பதற்காக, எனது தந்தை உருவாக்கிய பிராண்ட் தான் பச்சன். இந்த மரபை மேற்கொண்டு கடைப்பிடிப்பதில், நான் பெருமை கொள்கிறேன். நான் ஒரு பச்சன். நான் மது, புகையிலை போன்றவற்றிற்கான விளம்பரங்களில் நடிப்பதில்லை. அதுதான் எனது தர்மம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இரண்டாம் பாகம் வரட்டும்இரண்டாம் பாகம் வரட்டும் ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா! ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bhaskaran - Chennai,இந்தியா
22 பிப், 2019 - 15:13 Report Abuse
Bhaskaran இவர்தந்தை ஒருகவிஞர் அதனால் சீர்திருத்த கருத்துக்கள் மனதில் இயற்கையாக எழுந்திருக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in