நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
வித்யா பாலன், ஹிந்தியில் முன்னணி நடிகையில்லை என்றாலும், அவர் நடிக்கும் படங்கள், பெரிதும் பேசப்படும். சிறந்த நடிப்புக்காக, பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். 'வித்யா பாலன் படமா; அதில் ஏதாவது விஷயம் இருக்கும்' என, பாலிவுட் பிரபலங்களே பரவலாக பேசுவது உண்டு.
அப்படிப்பட்ட வித்யா பாலன், தெலுங்கில் அறிமுகமான, என்.டி.ஆர்., வாழ்க்கை வரலாற்று படத்தில், சிறிய வேடத்தில் நடித்து, சொதப்பி விட்டதாக, கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுபற்றி வித்யாவிடம் கேட்டால், 'இந்த படத்தில், என்.டி.ஆரின் மனைவி கேரக்டரில் நடித்துள்ளேன். முதல் பாகத்தில் எனக்கு அதிகம் வேலையில்லை. ஆனால், இரண்டாம் பாகம் முழுவதும், என்னைச் சுற்றித்தான் கதையே அமைந்துள்ளது. அந்த படம் வந்தபின் பார்த்து விட்டு, அதற்கு பின், விமர்சனத்தை வையுங்கள்' என, காட்டமாக பதில் அளித்துள்ளார்.