விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
நீயா 2, பார்ட்டி 2 படங்களில் நடித்து வரும் ஜெய், மலையாளத்தில் மம்முட்டி உடன் மதுரராஜா படத்திலும் நடித்திருக்கிறார். இந்தப்படங்களில் நீயா 2 தவிர மற்ற இரண்டும், படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் புதிதாக பிரேக்கிங் நியூஸ் என்ற படத்தில் நடிக்கிறார். தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமான பானு, தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் தேவ்கில், வேதாளம் வில்லன் ராகுல் தேவ், மந்திரா பேடி, இஷா கோபிகா, ராதா ரவி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
ஆண்ட்ரூ பாண்டியன் இயக்குகிறார். விஷால் பீட்டர் இசை. ராகுல் பிலிம்ஸ் சார்பாக கே. திருக்கடல் உதயம் தயாரிக்கிறார். தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக இப்படத்தில், புதிய தொழில்நுட்பத்துடன் 90 நிமிடங்கள் விசுவல் எபெக்ட்ஸில் இப்படம் உருவாக உள்ளது.
இப்படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது.