'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் படங்களைத் தவிர மற்ற படங்கள் முன்பதிவுக்கு தடுமாறும் ஒரு சூழல் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. டிக்கெட் கட்டண உயர்வு, தியேட்டர்களில் தின்பண்டங்களின் அநியாய விலை, பார்க்கிங் கட்டணக் கொள்ளை ஆகியவற்றை மீறி படத்தைப் பார்க்க வரும் நடுத்தரக் குடும்பத்து மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.
அவர்களது மாதாந்திர பட்ஜெட்டில் சினிமாவுக்கென தனியாக இப்போது ஒதுக்கப்படுவதில்லை. எப்போதாவது ஒரு முறைதான், சினிமாவுக்கென பட்ஜெட்டை ஒதுக்குகிறார்கள். இதனால், பல நடுத்தர, சிறிய பட்ஜெட் படங்களின் வசூல் வெகுவாகவே பாதிக்கப்படுகிறது.
நாளை பிப்ரவரி 22ம் தேதி 'எல்கேஜி, கண்ணே கலைமானே, பெட்டிக்கடை' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் 'எல்கேஜி, கண்ணே கலைமானே' ஆகிய இரண்டு படங்களும் வசதியான பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகள். ஆனால், இந்த இரண்டு படங்களுக்குமான பிரமோஷன் மிகக் குறைந்த அளவில் உள்ளது.
'எல்கேஜி' படத்தில் அரசியல் நிலவரங்களைக் கிண்டலடித்து டிரைலரில் சேர்த்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். 'கண்ணை கலைமானே' படம் குடும்பப் படமாக உருவாகி உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு அதிகாலை காட்சி குறித்து எல்கேஜி நாயகன் பாலாஜி, நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் சமூக வலைத்தளத்தில் சண்டையிட்டு பரபரப்பை ஏற்படுத்தினாலும் அந்த அதிகாலை காட்சிக்கான டிக்கெட் கூட இன்னும் முழுமையாக விற்கப்படவில்லை.
நாளை படம் வெளியாகும் நாளிலேயே இரண்டு படங்களுக்குமான முன்பதிவு மிகவும் குறைவாகவே உள்ளது. படம் வெளியாகி அதன் விமர்சனம் வந்த பிறகாவது அவை மாறுமா என்பது நாளைதான் தெரியும்.