90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? | ஹாலிவுட் வெப் தொடர் ரீமேக்கில் சமந்தா | மற்றுமொரு சர்வதேச விருது பெற்ற ஆர்ஆர்ஆர் | வெற்றி கலைஞனாக கடைசி மூச்சு அடங்க வேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம் | இந்தியாவில் முதல் முறை: சென்னை விமான நிலையத்தில் தியேட்டர் திறப்பு |
மயக்கம் என்ன படத்தின் மூலம் அறிமுகமானவர் பெங்களூரைச் சேர்ந்த பூஜா. அதன்பிறகு இறைவி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, ஆந்திராமெஸ் படங்களில் நடித்தார். தற்போது வல்லவனுக்கு வல்லவன் படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது பெங்களூருவில் வசித்து வரும் பூஜாவின் செல்போனை ஹேக்கர்கள் முடக்கி விட்டனர். இதனால் அவரால் செல்போனை பயன்படுத்த முடியவில்லை. அவரது வாட்ஸ்-அப்பின் மூலம் உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினருக்கு ஆபாச தகவல்கள், படங்களை அனுப்பி வருகிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த பூஜா, டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
எனது செல்போன் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. எனது வாட்ஸ்அப் கணக்கிலிருந்து நண்பர்கள், சினிமா துறையினருக்கு தகவல்கள் அனுப்பி தொடர்புகொள்கிறார்கள். எனவே எனது நம்பரை சேவ் செய்து வைத்திருப்பவர்கள் அதை நீக்கிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். என்று தெரிவித்திருக்கிறார்.