திவ்யா கிருஷ்ணனுக்கு சல்யூட் அடிக்கும் ரசிகர்கள் | டுவிட்டரில் நுழைந்த விக்ரம் | விஜய் ஆண்டனியின் ஒரு படத்தைக் கூடப் பார்க்காத மிஷ்கின் | சமந்தாவின் ‛யசோதா' ரிலீஸ் எப்போது | லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இளையராஜா இசை | அடுத்த ஹனிமூன் டிரிப்பா ; ரசிகர்கள் கேள்வி | தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் ஆலியா பட்டின் டார்லிங்ஸ் | வெந்து தணிந்தது காடு 2வது பாடல் ஆக.,14ல் வெளியாகிறது | அஜித்தின் 61வது படம் வல்லமை : நாளை போஸ்டர் வெளியாகிறது? | விஜய் 67 : 6 வில்லன்களின் அர்ஜுனும் ஒருவர் |
மலையாளத் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருக்கும் கனி குஷ்ருதி, 'பிசாசு', 'பர்மா' உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மா என்ற குறும்படத்திலும் அவர் நடித்து பிரபலமானார்.
'மா' படத்தில், தன்னுடைய இளம் வயது மகள் கர்ப்பிணியாக இருக்கும்போது, அவரை ஒரு தூணாக இருந்து எப்படியெல்லாம் உதவி செய்து தூக்கிப் பிடிக்கிறார் என்பதுதான், மா படத்தின் கதை. அதில், கனி, மிகச் சிறப்பாக நடித்திருந்தார். தற்போது, கனி, மலையாளப் பட உலகம் குறித்து, அதிர்ச்சியான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது:
மலையாளப் படங்களில் நடிப்பதில் நான் ஆர்வமாக இருந்தேன். ஆனால், நிறைய பட வாய்ப்புகளை நான் திட்டமிட்டு மறுக்கும் சூழல் ஏற்பட்டது. அதற்குக் காரணம், மலையாளப் படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களும்; தொழில் நுட்பக் கலைஞர்களும், பெண்ணை ஒரு போகப் பொருளாகப் பார்த்து, நடிக்க வாய்ப்புக் கொடுத்தால், உடலைக் கொடுத்து, அவர்களோடு ஒத்துப் போக வேண்டும் என எதிர்பார்த்தார்கள்; ஒரு சிலர், வெளிப்படையாகவே கேட்டார்கள்.
அப்படி, செக்ஸுவலாக வளைந்து போய், நடிக்கும் வாய்ப்பே வேண்டாம் என்றுதான் மறுத்து வந்தேன். இதில், ரொம்பவும் அதிர்ச்சியான விஷயம் எது தெரியுமா? 'அந்த மேற்படியான' விஷயத்துக்காக என்னை ஒத்துப் போகச் சொல்லி, என் அம்மாவிடம் கேட்டதுதான். 'மீ டூ' தலையெடுக்கத் துவங்கியதும், தற்போது, தான் நிம்மதியாக நடிப்புத் தொழிலில் இருக்கிறேன்.
இவ்வாறு கனி கூறியுள்ளார்.