அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா | 'கைதி' வரவேற்பு : ஹிந்தி ரீமேக்கான 'போலா'வுக்குக் கிடைக்குமா? | ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்த 'பிசாசினி' | மகேஷ் பாபு நடிக்கும் படம் : டைட்டிலுக்கு முன்பே ரிலீஸ் தேதி அறிவிப்பு | 2 நாயகிகள் அறிமுகமாகும் அங்காரகன் | 31ம் தேதி தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் | 8 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய திரையில் ஷெரின் | ஆஸ்கர் வென்ற 'ஆர்ஆர்ஆர்' குழுவினரை கவுரவித்த சிரஞ்சீவி |
ஒரு படம் வெளியாகும்போது மக்களை கவரும் வகையில் ஏதாவது செய்தால்தான் படத்திற்கு விளம்பரம் கிடைக்கும் என்பது இப்போதைய நிலை. அதை சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறது எல்.கே.ஜி படக்குழு. காமெடினாக நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். கே.ஆர்.பிரபு இயக்கி உள்ளார். ஜசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
அரசியல்வாதிகளை கிண்டல் செய்து புரமோ, கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் மூலம் விளம்பரம், இளையராஜா இசை நிகழ்ச்சியில் டிரைலர் வெளியீடு, டுவிட்டர் சண்டை என தொடர்ந்து பரபரப்பு கிளப்பி வந்த நிலையில் படக்குழுவினர், காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தி அடுத்த பரபரப்பை கிளப்பி உள்ளனர். இதுகுறித்து ஆர்ஜே.பாலாஜி கூறியதாவது:
அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஒரு ஊக்கமளிக்கும் அரசியல் பயணத்தை நிகழ்த்திய மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இதை நாங்கள் செய்திருக்கிறோம். எப்படி அம்மன் போன்ற கடவுள்களை பற்றி படம் எடுக்கும்போது, கே.ஆர்.விஜயா போன்றோர் அதற்காக விரதம் இருந்து ஆசீர்வாதம் பெற்றார்களோ, அது மாதிரி நாங்கள் நம் தலைவர்கள் காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி மற்றும் செல்வி ஜெயலலிதா ஆகியோரிடம் ஆசி பெற அவர்கள் நினைவிடங்களுக்கு சென்று வந்தோம். எங்கள் படமான எல்.கே.ஜி மூலம் இந்த தலைவர்கள் அவர்கள் காலத்தில் செய்த அற்புதமான விஷயங்களை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறோம்" என்றார்.