ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' சீசன் 1 நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஓவியாவைத் தேடி பல பட வாய்ப்புகள் வந்தன. களவாணி 2, காஞ்சனா 3 ஆகி படங்களை மட்டும் ஒப்புக்கொண்ட ஓவியா, 'குளிர் 100 டிகிரி' படத்தை இயக்கிய அனிதா உதீப் இயக்கியுள்ள '90 எம்எல்' படத்திலும் நடித்துள்ளார்.
இந்த படத்தில் ஓவியாவுடன் ஆன்சன் பால், நிதின் சத்யா, விஜய் வசந்த் விக்னேஷ் சிவன், அரவிந்த் ஆகாஷ், யோகி பாபு, ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிம்பு இசை அமைத்திருப்பதோடு, சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்சாரில் 'ஏ' சான்று வழங்கப்பட்ட இந்த படத்தை, முதலில் இம்மாதம் 22-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருந்தார்கள். ஆனால் திடீரென்று இப்படத்தின் ரிலீஸை தள்ளி வைத்த படக்குழுவினர், மார்ச் 1-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். இந்தப்படத்தை பிரபல விநியோகஸ்தரான டிரைடண்ட் ரவீந்திரன் என்பவர் வேறு ஒருபெயரில் வெளியிடுகிறார்.