Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராமராஜன் பட தலைப்பில் சிவகார்த்திகேயன் படம்

20 பிப், 2019 - 12:14 IST
எழுத்தின் அளவு:
Ramarajan-movie-titled-for-Sivakarthikeyan-film

நடிகர் சிவகார்த்திகேயனின் 'சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் தயாரித்த முதல் படம் 'கனா. கடந்த வருடம் வெளியான இந்த படம் வெற்றிப் படமாக அமைந்தது மட்டுமல்ல தரமான படம் என்ற பெயரையும் பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது இரண்டாவது தயாரிப்பாக அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணு இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு முடிவடந்து தற்போது இந்த படத்தின் டப்பிங் வேலைகள் துவங்கியுள்ளன.

இப்போது இந்த படத்திற்கு 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்.நடித்த 'என் அண்ணன்' படத்தில் இடம் பெற்ற பாடல் 'நெஞ்சம் உண்டு... நேர்மை உண்டு...' என்று துவங்கும் பாடல். இந்த பாடல் வரியை சில வருடங்களுக்கு முன் தனது படத்திற்கு தலைப்பாக சூட்டினார் ராமராஜன்.

தற்போது ராமராஜன் படத்தின் தலைப்பை தன்னுடைய படத்துக்கு சூட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறார்கள். இந்த படத்தில் சின்னத்திரை தொகுப்பாளர் டிவி சீரியல் நடிகர் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கிறார். ஷிரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நாஞ்சில் சம்பத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ப்ரியா ஆனந்த்திற்கு என்ன ரோல்.?ப்ரியா ஆனந்த்திற்கு என்ன ரோல்.? '90 எம்எல்' படத்தை வெளியிடும் பிரபல விநியோகஸ்தர் '90 எம்எல்' படத்தை வெளியிடும் பிரபல ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in