Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ப்ரியா ஆனந்த்திற்கு என்ன ரோல்.?

20 பிப், 2019 - 12:10 IST
எழுத்தின் அளவு:
What-role-to-Priya-Anand.?

பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் நடித்த 'வர்மா' படம் முடிவடைந்த நிலையில் தயாரிப்பாளர் மற்றும் விக்ரம் குடும்பத்தினருக்கு திருப்தி இல்லை என்பதால் படத்தையே தூக்கிப்போட்டார்கள்.

வர்மா படம் கைவிடப்பட்டதை தொடர்ந்து 'வர்மாவின் புதிய வெர்ஷனை உருவாக்க இந்த படத்தை தயாரிக்கும் 'இ4 என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த படத்தில் துருவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சாந்த், ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்த படத்தை இயக்குவது யார் என்பது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தநிலையில், 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கிய சந்தீப் வங்காவுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த கிரிசாயா இயக்க இருக்கிறார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

அதோடு, வர்மா என்ற தலைப்பை மாற்றிவிட்டு இந்த படத்திற்கு 'ஆதித்ய வர்மா' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் துருவ், பனிதா ஆகியோருடன் ப்ரியா ஆனந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த வாரம் வெளியாகவிருக்கும் எல்கேஜி படத்தில் கதாநாயகியாக நடித்துவரும் நிலையில் ப்ரியா ஆனந்துக்கு ஆதித்யா வர்மா பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. படத்தில் அவர் ரைசா வில்சன் கேரக்டரில் நடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'போஸ்' வெங்கட் இயக்கும் படத்தில் பாடகரானார் ரோபோ சங்கர்'போஸ்' வெங்கட் இயக்கும் படத்தில் ... ராமராஜன் பட தலைப்பில் சிவகார்த்திகேயன் படம் ராமராஜன் பட தலைப்பில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in