தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா | பிரபாஸின் சலார் படத்தில் யஷ் | தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' : சென்னையில் ஆரம்பம் | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் : ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பம் | சிவகார்த்திகேயனின் மாவீரன் பட கதை மாற்றமா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | விஜய் சேதுபதி தந்த பர்த்டே சர்ப்ரைஸ் : வாயடைத்து போன பவித்ரா ஜனனி | பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதாவா? | அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து - பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிநயா | தமிழ் நடிகர்களுக்கு மரியாதையுடன் அதிக சம்பளம் : சம்பத்ராம் |
சின்னத்திரை சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் பழைய மற்றும் நீண்ட தொடர்கள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. வழக்கமான மாமியார், மருமகள் பிரச்சினை, சொத்து தகராறு போன்ற கதைகளை தள்ளிவிட்டு புதிய புதிய கதைகளில் தொடர்கள் தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் அடுத்து வருகிறது பாரதி கண்ணம்மா என்ற புதிய தொடர். வருகிற 25ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது.
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஒரு இளைஞனின் முன்னால் கருப்பு நிறமும் வெள்ளை குணமும் கொண்ட பெண்ணும், சிவப்பு நிறமும் கருப்பு குணமும் கொண்ட பெண்ணும் நிற்கிறார்கள். அவர்களில் தன் மனைவியாக யாரை அவன் தேர்வு செய்கிறான். அதாவது அழகையா, குணத்தையா? அதன் முடிவு என்ன என்பதுதான் சீரியலின் ஒன் லைன்.