Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி

18 பிப், 2019 - 17:53 IST
எழுத்தின் அளவு:
RJ-Balaji-shares-about-LKG

காமெடியனாக நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி, எல்கேஜி படத்தில் கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இந்த படத்தில் அவர் கதை, திரைக்கதை எழுத, பிரபு என்பவர் இயக்கியிருக்கிறார். நாயகியாக பிரியா ஆனந்த் நடிக்க, அரசியல்வாதிகள் நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ் ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதுபற்றி ஆர்.ஜே.பாலாஜி கூறுகையில், சினிமாவில் காமெடியனாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தபோது, எனக்கு நான் எதிர்பார்த்த வேடங்கள் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் ஏற்பட்டது. அதனால் தான் எனக்கு நானே கதை ரெடி பண்ணத் தொடங்கினேன். அந்த கதையை ஐசரி கணேசனிடம் சொன்னபோது அவர் தயாரிக்க முன்வந்தார்.

இந்த கதையில் ஒரு வில்லன் வேடத்திற்கு நிஜ அரசியல்வாதியே நடித்தால் நன்றாக இருக்கும் என்று நாஞ்சில் சம்பத்தை கேட்டோம். அவரை அணுகியபோது, சென்னையில் ஒரு 600 அடி வீட்டில் இருந்தார். மிகப்பெரிய கோடீஸ்வரராக சோசியல் மீடியாக்களில் சித்தரிக்கப்பட்டு வரும் அவரை அத்தனை சிறிய வீட்டில் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். அதோடு, என் மகனின் கல்லூரி பீஸை கட்டினால் நடிக்கிறேன் என்று சொன்னார். அதை கேட்டு மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அவர் அவ்வளவு கஷ்டத்தில இருந்தார். அவர் பழகின விதம் என்னை கவர்ந்தது.

அதனால் வில்லன் போன்று அவரது கேரக்டரை ரெடி பண்ணி வைத்திருந்த நான் பின்னர் அதை பாசிட்டீவாக மாற்றினேன். ஏனென்றால் அதுதான் அவருக்கு பொருத்தமாக இருக்கும். அவரது நிஜ குணத்தை வச்சே அவரது கேரக்டரை உருவாக்கினேன் என்று சொன்ன ஆர்.ஜே.பாலாஜி, இந்த படத்தில் நாயகன் உள்பட சில படங்களில் நடித்தவரான அரசியல்வாதி ஜே.கே.ரித்தீசும் ஒரு அரசியல்வாதி வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படி நிஜ அரசியல்வாதிகளே இந்த காமெடி கலந்த அரசியல் படத்தில் நடித்திருப்பதால் படத்திற்கு ஒரு புதிய கலர் கிடைத்திருக்கிறது என்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல்வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ... இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி இறந்த பின்பும் தொண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

VELAN S - Chennai,இந்தியா
26 பிப், 2019 - 10:53 Report Abuse
VELAN S யார் கிட்ட பணம் போகுது , யார் கிட்ட பணம் வருது என்பதே தெரியலியே , இன்னம் கொஞ்ச நாளைக்கு பாலாஜி கையிலே பணம் வரும் போலிருக்கு சம்பத் கையிலே கொஞ்சம் நிறைய பணம் கொடுங்கப்பா , வாழ்க்கையை நல்ல நடத்தட்டும் , அவரை பற்றி கேட்க கஷ்டமாகத்தான் இருக்கு ,அதே மாதிரி கஷ்டப்படுற எல்லா விவசாயிகளுக்கும் ஏதாவது நிதி உதவி பண்ணி அவங்களையும் வாழ விடுங்க .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in