Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல: சாயிஷாவின் அம்மா

17 பிப், 2019 - 14:25 IST
எழுத்தின் அளவு:
arya-shayesha-marriage-is-not-a-love-marraige-says-shayesha-mother

எங்கள் திருமணம் காதல் திருமணம் என நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் சொல்லிக் கொண்டிருக்க, நடக்கப் போகும் திருமணம் காதல் திருமணம் அல்ல; இரு வீட்டார் பேசி முடிவெடுத்து, அதன் பின் நடக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என நடிகை சாயிஷாவின் அம்மா ஷாஹினி கூறியுள்ளார்.

நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் கஜினிகாந்த் திரைப்படத்தில் ஒன்றாக நடித்தனர். பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் பேத்திதான் சாயிஷா.


ஆர்யாவும், சாயிஷாவும் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள், சில நாட்களுக்கு முன் வெளியாகின.


இதையடுத்து, காதலர் தினமான பிப்ரவரி 14ல், நடிகர் ஆர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில், தானும் சாயிஷாவும் ஒன்றாக இருக்கும் படத்தைப் பதிவிட்டு, தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும், மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அதே பதிவை அப்படியே சாயிஷாவும், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, இருவருக்கும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.


இவர்களது திருமணம் குறித்து சாயிஷாவின் அம்மா ஷாஹினி கூறியிருப்பதாவது:


இந்தத் திருமணத்தில், எங்களுக்கு முழு விருப்பம் உள்ளது. எங்கள் குடும்பத்தாருக்கும், ஆர்யா குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, ஆர்யாவின் ட்வீட் அமைந்து இருந்தது. இது காதல் திருமணம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே, இந்த முடிவு இரு குடும்பத்தாரும் இணைந்து எடுத்தது. ஆர்யாவின் குடும்பத்தாருக்கு, சாயிஷாவை பிடித்துப் போயிருந்ததால் திருமணத்திற்காக அணுகினர். ஆர்யா என் மகளைத் திருமணம் செய்து கொள்வது, மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணத்துக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால், அதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளோம்.


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'கென்னடி கிளப்' படம்; கபடிதான் கதைக் களம்'கென்னடி கிளப்' படம்; கபடிதான் ... அதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ் அதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19 பிப், 2019 - 04:09 Report Abuse
J.V. Iyer ஆர்யாவுக்கு சயிஷாவின் அம்மாதான் பொருத்தம். சாயிஷா அவருக்கு மகள் மாதிரி
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
17 பிப், 2019 - 17:57 Report Abuse
Sathish இந்த பெண்மணி ஆர்யாவை விட ஒரு ஐந்து வயது தான் கூடுதலாக இருப்பார் போல.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
17 பிப், 2019 - 17:34 Report Abuse
Bhaskaran பிடிச்சாலும் புளியன் கொம்புதான் மும்பை பங்களாவே நூறு கோடி போகும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in