Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை

16 பிப், 2019 - 16:38 IST
எழுத்தின் அளவு:
Director-Perarasu-warns-reviewer

சமூக வலைதளம் என்னும் ஒரு தொழில்நுட்பம் அனைவர் விரல் நுனிக்கும் வந்த பின், ஒவ்வொரு நபருமே ஒரு பத்திரிகையாளர்தான் என்ற நிலைமை உருவாகி விட்டது. தான் என்ன கருத்தை நினைக்கின்றனரோ, அடுத்த நொடியில், அதை சமூக வலைதளம் மூலம் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு சென்று விட முடியும்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன், ஒரு திரைப்படம் வெளியாகும் போது, அந்த படத்தை ஒரு சில முன்னணி பத்திரிகைகள் மட்டுமே விமர்சனம் செய்து வந்தன. ஆனால், தற்போது யூடியூப் வந்த பின், படம் ரிலீசான சில மணித்துளிகளில், நூற்றுக்கணக்கான விமர்சன சேனல்கள் மூலம், விமர்சனங்கள் உலகம் முழுக்க சென்று விடுகிறது.

முதல் காட்சி முடிந்த ஒருசில நிமிடங்களில் யூடியூபில் விமர்சனம் வந்து, அந்த படத்தின் வெற்றிக்கும்; தோல்விக்கும் காரணமாகி விடுகிறது. இந்த நிலையில், 'கோணலா இருந்தாலும் என்னோடது' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு யூடியூப் விமர்சகர்களுக்கு எச்சரிக்கை விடுத்து பேசினார்.

அவர் பேசியதாவது: ஒரு திரைப்படத்தை பார்த்து, யார் வேண்டுமானாலும், தாராளமாக விமர்சனம் செய்யட்டும். யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அதேநேரம், விமர்சகர்கள் படத்தை மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும். படத்தில் பணிபுரிந்த கலைஞர்களையும், டெக்னீஷியன்களையும், தயாரிப்பாளர்களையும், தனிப்பட்ட முறையிலும்; ஒருமையிலும் விமர்சனம் செய்கின்றனர். அது தேவையில்லாத ஒன்று. தொடர்ந்து இதையே செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது.

ஒரு படத்தை தயாரிக்க, ஒரு தயாரிப்பாளர் எந்த அளவுக்கு கஷ்டப்படுவார் என்பது, சினிமாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால், விமர்சனம் செய்பவர்களுக்கு, அது தெரியாது. எனவே, விமர்சனம் செய்பவர்கள், தயவு செய்து மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள். விமர்சனம் என்றாலும், அதை தர்மத்தோடும்; நியாயத்தோடும் செய்யுங்கள்.

இவ்வாறு பேரரசு பேசினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்'ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் ... உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Naan Sirithal
    • நான் சிரித்தால்
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : ஐஸ்வர்யா மேனன்
    • இயக்குனர் :இராணா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in