Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்'

16 பிப், 2019 - 16:33 IST
எழுத்தின் அளவு:
Oru-Adaar-love-not-satisified

புகழுக்கும், வெற்றிக்கும் வெகு தூரம் என்பதை சினிமா மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. கடந்த வருடம் மலையாளத்தில் உருவாகி வந்த 'ஒரு அடார் லவ்' என்ற படத்தின் அறிமுக நாயகி பிரியா பிரகாஷ் வாரியர், கண்ணடித்த பாடல் வீடியோ ஒன்று மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பின் பிரியாவின் அந்த கண்ணடித்தலைப் பற்றி பலரும் பாராட்டி எழுதி அவருக்கு ஒரே நாளில் 10 லட்சம் பாலோயர்களை இன்ஸ்டாகிராமில் பெற்றுத் தந்தது. அந்தப் புகழை வைத்தே படம் வெளியாகும் போது வசூலை அள்ளிவிடலாம் என்று தயாரிப்பு நிறுவனம் கணக்குப் போட்டது.

மலையாளத்தில் எடுக்கப்பட்ட படத்தை தமிழில் அதே பெயரிலும், தெலுங்கில் 'லவ்வர்ஸ் டே' என்ற பெயரிலும் இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்கள். மலையாளத்திலேயே படம் பெரிய தோல்வியைத் தழுவிய நிலையில் டப்பிங் ஆகி வெளியான மற்ற மொழிகளிலும் ஒரே நாளில் படம் ஆட்டம் கண்டுவிட்டதாம்.

சொதப்பலான கதை, மிகச் சாதாரண திரைக்கதை படத்தை இப்படிப்பட்ட தோல்விக்குத் தள்ளிவிட்டது. இந்தப் படம் வெளிவந்த பிறகு, தன் புகழ் வேறு எங்கோ போய்விடும் என்ற கனவில், தெலுங்கிலிருந்து தயாரிப்பாளர்கள் வந்த போது 1 கோடி சம்பளம் கேட்டு ஓடவிட்டாராம் பிரியா. இனி, அவரைத் தேடி யார் போவார்கள் என்பதுதான் கேள்வி.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் ... விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
20 பிப், 2019 - 16:02 Report Abuse
அம்பி ஐயர் இந்தப் படம் ஓடவில்லை என்றாலும் இளைஞர்களை ஈர்க்கும்.... குறிப்பாக நூரின் ஷெரிஃப்... இந்தப் படம் ஓடாததற்கு மிக முக்கியக் காரணம் சொதப்பலான கிளைமேக்ஸ் தான்....
Rate this:
skv - Bangalore,இந்தியா
19 பிப், 2019 - 11:48 Report Abuse
skv<srinivasankrishnaveni> ரெண்டுமே செத்த தேவாங்குபோல இருக்குங்க லவ் கேக்குதா
Rate this:
18 பிப், 2019 - 03:00 Report Abuse
Ganesan Madurai பேசாம பப்பூ வுக்கு அஸிஸ்டென்ட் வேல பாக்கலாம்
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17 பிப், 2019 - 19:45 Report Abuse
Nallavan Nallavan இந்தப் படம் ஓடவில்லை என்றால் என்ன ?? அவரது இளமை தயாரிப்பாளர்களை ஈர்க்கும் .....
Rate this:
Rajesh -  ( Posted via: Dinamalar Android App )
17 பிப், 2019 - 00:31 Report Abuse
Rajesh good lesson
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in