Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழக வீரர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் : அம்சவர்தன்

16 பிப், 2019 - 15:36 IST
எழுத்தின் அளவு:
Actor-Hamsavardhan-announced-Rs.2-lakhs-to-TN-CRPF-jawans-family

காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை கொடூர தாக்குதலுக்கு, 44 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளார்கள். இந்த படுபாதக செயல், நாடு முழுவதும் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என நாடு முழுவதும் குரல்கள் ஒலிக்க துவங்கி உள்ளன. பலியான வீரர்களில் தமிழகத்தின், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு, சவலப்பேரியை சேர்ந்த சுப்ரமணியமும், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பழூர் கார்குடியை சேர்ந்த சிவசந்திரனும் உயிரிழந்தனர்.

இவர்களின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு தலா ரூ.20 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளது. அதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி அளிக்க இருப்பதாக நடிகர் அம்சவர்தன் கூறியுள்ளார். இதற்காக அந்த குடும்பத்தினரை சந்திக்க இருக்க இருக்கிறார். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஆவார்.

வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு, நடிகர்கள் சார்பில் முதன் முதலில் நிதி உதவி அளித்து, துவங்கி இருக்கிறார் அம்சவர்தன். இவரைப்போன்று மற்ற திரைநட்சத்திரங்கள் உதவுவார்களா.?

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மோகன்லால் பட செட்டிற்கு விசிட் அடித்த அஜித்மோகன்லால் பட செட்டிற்கு விசிட் ... 'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி 'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
18 பிப், 2019 - 01:13 Report Abuse
Murugan உங்கள் உதவும் மாண்பிற்கு மிக்க நன்றி…………………..
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
17 பிப், 2019 - 04:52 Report Abuse
Bhaskaran இவருக்கு வாய்ப்புகளே இல்லை என்றாலும் பெரிய மனதுடன் நிவாரணம் வழங்க அறிவித்துள்ளார் வாழ்க நம் ஊர்பெரியநடிகர்களும் இருக்கிறார்களே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in