Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு முடிவுகட்டும் நேரம் : ரஜினி

15 பிப், 2019 - 19:04 IST
எழுத்தின் அளவு:
PulwamaAttack-:-Rajinikanths-strong-statement

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வாகனத்தில் சென்றபோது, வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை வெடிக்கச் செய்து பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடுமுழுவதும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன. பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள கண்டன செய்தியில், "காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய வன்முறை தாக்குதல் மன்னிக்க முடியாதது. இது கண்டிக்கத்தக்கது. காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். மாவீரர்களின் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.
கமல்ஹான்

நாட்டின் குடிமகன்கள் அனைவரும் வீரர்களுடன் தோளோடு தோள் நிற்போம். புல்வாமா பயங்கரவாத தாக்குதல் கண்டனத்திற்குரியது என கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும் காஷ்மீர் மாநில கவர்னரின் ஆலோசகர் விஜயகுமாரிடம் போனில் நடந்த விஷயங்களை கேட்டறிந்தார்.Advertisement
கருத்துகள் (25) கருத்தைப் பதிவு செய்ய
ஹாலிவுட் படத்திற்கு முருகதாஸ் வசனம்ஹாலிவுட் படத்திற்கு முருகதாஸ் வசனம் சவுந்தர்யா தேனிலவு டுவீட்டுக்கு எதிர்ப்பு சவுந்தர்யா தேனிலவு டுவீட்டுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (25)

துயில் விரும்பி - coimbatore,இந்தியா
16 பிப், 2019 - 10:39 Report Abuse
துயில் விரும்பி டீ பிரேக்ல வந்துட்டார். தலைவா ஷாட் ரெடி கூப்பிடறாங்க. இந்த டயலாக் கே நல்ல இருக்கு, இதையே வச்சிக்கிலாம்ன்னு டைரெக்டர்கிட்ட சொல்லிடுங்க.
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
16 பிப், 2019 - 10:10 Report Abuse
Raman Ganesan இந்த தாக்குதலுக்கு சூர்யா விக்னேஷ் சிவன், மாதவன் இன்னும் பலர் கண்டனம் தெரிவிச்சு இருகாங்க ஆனா ரஜினி மேல மட்டும் இங்க உள்ள பலர் அழுகுறாங்க அதுலயே அவங்க புத்தி தெரியுது
Rate this:
Jesudass Sathiyan - Doha,கத்தார்
16 பிப், 2019 - 10:09 Report Abuse
Jesudass Sathiyan மாப்பு நீ எதுக்கு இந்த கூவு கூவுறன்னு தெரியும்.
Rate this:
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
16 பிப், 2019 - 10:05 Report Abuse
தாண்டவக்கோன் இவர் தனது பங்களாவில் இருந்து வெய்யில் படாமல் குளு குளு காரில் வெளியே சென்று தூசி படாமல் திரும்பி வருபவர்.
Rate this:
ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
16 பிப், 2019 - 09:51 Report Abuse
ngopalsami தலைவரே, இது சினிமா இல்லை ஆவேசமா வீர வசனம் பேச. ஏதாவது பயனுள்ள காரியத்தை செய்தால் அனைவரும் பாராட்டுவார்கள்.
Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in