'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'கண்ணே கலைமானே'. இந்தப்படம், வரும் 22ல் வெளியாகவுள்ளது. படத்திற்கான புரமோஷன் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்தப்படம் நடிகர் விஜய் சேதுபதிக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தப் பின், அவர் படம் குறித்து முழு விமர்சனத்தை வைத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
உதயநிதி ஸ்டாலின் நடித்த, சீனு ராமசாமி இயக்கியிருக்கும் 'கண்ணே கலைமானே' படம் பார்த்தேன். இது ரொம்ப அன்பான, அழகான ஒரு திரைப்படம். படத்தில், நல்ல செய்தி இருக்கிறது. அன்பு பத்தின அழகான பார்வையை, இந்த படம் பதிய வைத்திருக்கிறது. உதயநிதி, இந்தப்படத்தில் அருமையாக நடித்திருக்கிறார். நான், முதன் முதலா இப்போதுதான் உதயநிதியை நேரில் பார்க்கிறேன். மரியாதையாக எல்லாரையும் அணுகுகிறார். படத்தில், ரொம்ப நிதானமாக, ரொம்ப அழகாக நடித்திருக்கிறார். வடிவுக்கரசி, தமன்னா, ராமு எல்லோருமே படத்தில் நன்றாக நடித்துள்ளனர். படத்துல வசனம் பட்டைய கிளப்புது. ரசிச்சு பார்க்க வேண்டிய ரொம்ப அழகான திரைப்படம்.
இவ்வாறு விஜய் சேதுபதி கூறியுள்ளார்.