துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்துள்ள 'கண்ணே கலைமானே' படம் ரெடியாகி பல மாதங்களாக கிடப்பில் கிடந்தது. இப்போது படத்தை இம்மாதம் 22-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். அதேநாளில் மேலும் இரண்டு படங்கள் வெளியாகும் என்ற அறிவிப்பு உதயநிதியை அப்ஸெட்டாக்கியுள்ளது.
அதில் ஒன்று சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ள 'பெட்டிக்கடை'. இந்த படத்தில் 'மொசக்குட்டி' படத்தில் நடித்த வீராவும் முக்கிய கேரக்டரில் நடிக்க, வர்ஷா, சாந்தினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள 'LKG' திரைப்படமும் இம்மாதம் 22-ஆம் தேதி வெளியாகிறது. ஐசரி கணேஷின் 'வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை கே.ஆர்.பிரபு இயக்கியுள்ளார். அரசியல் நய்யாண்டி படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்துக்கு தமிழகம் முழுக்க கூடுதல் தியேட்டர்களை கமிட் பண்ணியுள்ளனர். இதனால், உதயநிதியின் 'கண்ணே கலைமானே' படத்துக்கு தியேட்டர்கள் குறைவாகவே கிடைத்துள்ளன.