ஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |
பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு படத்தில், பா.ஜ., தலைவர் அமித் ஷா வேடத்தில் நடிக்க, பாலிவுட் நடிகர் மனோஜ் ஜோஷி, ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை, திரைப்படமாக தயாராகி வருகிறது. இதை, ஓமங்குமார் இயக்குகிறார்.
இந்த திரைப்படம், 23 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், நரேந்திர மோடியாக நடிக்கிறார். பொம்மன் இரானி, சுரேஷ் ஓபராய், ஜரினா வஹாப் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இத்திரைப்படம், லோக்சபா தேர்தல் நேரத்தில், வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில், அமித் ஷா வேடத்தில் நடிக்க, மனோஜ் ஜோஷி, ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இவர், பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்து உள்ளார்.