Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கீழ்தரமான போஸ்டர் : விஜய் சேதுபதி கோபம்

14 பிப், 2019 - 15:40 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-denied-to-promote-Vulgar-movie-poster

சினிமா படங்களுக்கு விளம்பரம் மிக முக்கியமானது தான், ஆனால், சமீபகாலமாக தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்டு வரும் சில படங்களுக்கு மிகவும் கீழ்த்தரமாக விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்தேறி இருக்கிறது.

சென்னை மாநகர் முழுவதும் ஒரு போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. அதில் இடம் பெற்ற வாசகம் இது தான் "----- போட பொண்ணு வேணும்". பள்ளி, கல்லூரி அருகேயும் ஒட்டப்பட்ட இந்த போஸ்டரை பார்த்து பொதுமக்கள் பலரும் முகம் சுழித்தனர், கோபமானார்கள்.

அது என்ன போஸ்டர் என்று விசாரித்தபோது ஒரு படத்திற்கான விளம்பரம் என தெரியவந்தது. சின்னத்திரை புகழ் அசார், "கடல போட ஒரு பெண்ணு வேணும்" என்ற படத்தில் நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி இன்று(பி., 14) வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தலைப்பே மோசமாக இருக்கும் ஒரு படத்திற்கான விளம்பரமாக தான், இப்படி ஒரு கீழ்த்தரமான விளம்பரத்தை, நகர் முழுதும் ஒட்டியிருக்கின்றனர். இரட்டை அர்த்தம் தொணிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்ட, அந்த பட பர்ஸ்ட் லுக்கை, விஜய் சேதுபதி வெளியிட போகிறார் என்றதும், அவருக்கும் கண்டனங்கள் எழுந்தன.

பெண்களை கொச்சையாக சித்தரிக்கும் இது போன்று போஸ்டர் ஒட்டப்பட்ட படத்தை விஜய் சேதுபதி விளம்பரம் செய்யலாமா, தன்னை நேர்மையானவராக காட்டிக் கொள்ளும் விஜய் சேதுபதி இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்கலாமா, இது போல ஒரு தரம் கெட்ட விளம்பரத்தோடு வரும் பட போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டால், அது அவருக்கு அவமானமே அன்றி பெருமை அல்ல... என சமூக வலைதளங்களில் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், இப்படி ஒரு தரம் தாழ்ந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது என தெரிந்ததும், கோபமான விஜய் சேதுபதி, பட டீசரை வெளியிட மறுத்துவிட்டார். விஜய் சேதுபதி போன்று மற்ற நடிகர்களும் இதுபோன்ற படங்களை ஊக்குவிக்காமல் இருக்க வேண்டும் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதேசமயம், இதுமாதிரியான தரம் தாழ்ந்த விளம்பரம் தேடும் நபர்கள் மீதும், போஸ்டர் ஒட்டியவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர்.

பெண்களை தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் சித்தரிக்கும் படங்கள் தொடர்ந்து அதிகமாக வந்து கொண்டிருப்பது தமிழ் திரையுலகை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது. இது நல்லதா... சீரழிவா...? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
லட்சுமியின் என்டிஆர் டிரைலர் - அடுத்த பரபரப்பு ஆரம்பம்லட்சுமியின் என்டிஆர் டிரைலர் - ... ராஷி கண்ணாவை உற்சாகப்படுத்திய அஞ்சலி சிபிஐ ஆபீசர் ராஷி கண்ணாவை உற்சாகப்படுத்திய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

manis - doha,கத்தார்
18 பிப், 2019 - 10:31 Report Abuse
manis புள்ளி ராசாவுக்கு எய்ட்ஸ் வருமான்னு ஒரு விளம்பர போஸ்டர் ஒரு காலத்துல இருந்த மாதிரிதான்
Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
17 பிப், 2019 - 04:28 Report Abuse
 nicolethomson அசார் இப்படி எல்லாம் பிழைப்பு நடத்தலாமா?
Rate this:
R Sanjay - Chennai,இந்தியா
16 பிப், 2019 - 16:30 Report Abuse
R Sanjay இந்த படத்திற்கு தலைப்பு வைத்தவர்கள் மற்றும் இந்த படத்தை எடுத்தவர்கள் முக்கியமாக இப்படி விளம்பரம் செய்ய ஐடியா கொடுத்த அதிமேதாவிகள் என்று அனைவரையும் துப்பாக்கி குண்டுகளால் போட வேண்டும்
Rate this:
R S BALA - Chennai,இந்தியா
16 பிப், 2019 - 16:03 Report Abuse
R S BALA விஜய் சேதுபதி டீசர் வெளியிட மறுத்தாரா ... அவரது படம் ஒன்றில் நயன்தாரா பார்த்திபனை பார்த்து உன்னை நான் போட வேண்டும் என்று வசனம் பேசினாரே .. அது இரட்டை அர்த்தம் இல்லையா .. அப்போது அந்த வசனத்தை ஏன் சேதுபதி கண்டுகொள்ளவில்லை .
Rate this:
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
16 பிப், 2019 - 13:24 Report Abuse
Vivekanandan Mahalingam தாய் மதம் விட்டு வேறு மதம் சென்றவர்களுக்கு தாய் தமக்கை என்ற உணர்வு கிடையாது . அவர்களுக்கு எல்லா பெண்களும் காமத்துக்கு தான்
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in